-அரவிந்தன் நீலகண்டன், துக்ளக் சத்யா, ச.சண்முகநாதன், முரளி சீதாராமன்
காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22இல் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 ஹிந்துக்களும் ஒரு இஸ்லாமியரும் பலியாகினர். இது தொடர்பான சில சமூக ஊடக கண்டனப் பதிவுகள் இங்கே…

1. பதிலடியே நீதி
-அரவிந்தன் நீலகண்டன்
காஷ்மீர் ஜிகாதி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டோரின் குடும்பங்களின் வேதனை இதயத்தைக் கடுமையாகத் தாக்குகிறது. பயங்கரவாதிகள் எந்தத் தாக்குதலையும் இம்மண்ணில் நினைக்கக்கூட நடுங்கும் அளவுக்கு பாரதம் தகுந்த பதிலடியை அளிப்பது மட்டுமே மரணித்த நம் சோதரருக்கு நாம் காட்டும் உண்மை மரியாதை. அதுவே அவர்களுக்கு வழங்கப்படும் நீதி.
இங்கு இறந்திருப்பது –
என் மகனாக இருக்கலாம்; என் சகோதரனாக இருக்கலாம்.
இங்கு இதயம் வெடிக்க கண்ணீர் சிந்தி செயலற்றிருப்பது என் சகோதரியாக இருக்கலாம்; என் மகளாக இருக்கலாம்.
இன்று இந்த பயங்கரவாதமும் அதன் பின்னாலிருக்கும் கருத்தியலும் கருவறுக்கப்படாவிட்டால் இந்த சோகம் நாளை நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கலாம்.
எனவே இந்த பயங்கரவாதத்தை மட்டுமில்லாமல் இந்த பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் கருத்தியலையும் ஒழித்துக்கட்ட வேண்டும். அதை இந்த அரசாங்கம் செய்யும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
ஜெய்ஹிந்த்! வந்தேமாதரம்!
$$$
2. நிதானமான பார்வை தேவை!
-துக்ளக் சத்யா
பஹல்காமில் நடந்த தீவிரவாதம் குறித்து மனதில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது.
ஹூசைன் ஷா என்ற ஒரு முஸ்லிம் தொழிலாளி சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக எந்த ஆயுதமும் இன்றி, தீவிரவாதிகளுடன் போராடி, தன் உயிரையே இழந்துள்ளார். அவரது வீரமும் தியாகமும் நாடே பெருமை கொள்ளத் தகுந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் காட்டிய மனிதாபிமானம் கோடிக்கணக்கான ஹிந்துக்களையும் உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது.
ஆனால், இதைக் காட்டி, அங்கு ஹிந்துக்களுக்கு எதிராக தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தின் கொடூரத்தைக் குறைக்க முற்படுவது நேர்மையற்ற செயல். எந்தத் தவறும் செய்யாத ஹிந்துக்கள் 26 பேர், சில தீவிரவாதிகளின் மதவெறிக்கு பலியான நிகழ்ச்சி எளிதில் மறக்கக் கூடியதல்ல; மன்னிக்கக் கூடியதும் அல்ல.
அடியேன் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். சிறுபான்மையின நண்பர்கள் பலருடன் நான் பழகியிருக்கிறேன். நெருங்கிய நண்பர்களுக்காக எந்த உதவியையும் செய்யும் மனம் கொண்டவர்களாகவே அவர்களை அறிந்திருக்கிறேன்.
இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதால், அவர்களைப் பற்றிய எண்ணத்தை நான் மாற்றிக்கொள்ளத் தேவையில்லை.
பாகிஸ்தான், பாடம் கற்பிக்கப்பட வேண்டிய ஒரு நாடு. காஷ்மீரில் காட்டுமிராண்டித்தனம் நடத்திய தீவிரவாதிகள், வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். இதிலும் மாற்றுக் கருத்து இல்லை. இது தேசத்தின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக நமக்கு எழுகிற உணர்வு.
இச்சம்பவத்திற்கும் இந்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான ஹிந்து- முஸ்லிம் மக்களுக்கு இடையேயான உறவுக்கும் சம்பந்தமில்லை. இதனால், அம்மதத்து மக்கள் மீது ஹிந்துக்கள் கோபமோ, வெறுப்போ, வருத்தமோ கொள்வது எந்த வகையிலும் நியாயமற்றது.
ஒரு தொழில்முறை தீவிரவாதக் கூட்டம் நடத்திய செயலுக்கு, சம்பந்தமே இல்லாத அம்மதத்து மக்கள் மீது நாம் கொண்டுள்ள நேசத்தை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்?
பஹல்காமில் நடந்த தீவிரவாதச் செயல் நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கும் தேவையற்ற தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.
தீவிரவாதம்- ஹிந்துக்கள் மட்டுமே எதிர்க்க வேண்டிய ஒன்றல்ல. அனைத்து மக்களாலும் எதிர்க்கப்பட வேண்டியது. அனைவரும் வேறுபாடுகளை மறந்து இணைய வேண்டிய நேரம் இது.
உண்மையில், நாட்டு மக்களின் மனங்களில் மத வேறுபாடுகள் இல்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையின ஓட்டுகளை குறி வைத்து , அரசியல் கட்சிகளும், தலைவர்களும் செய்யும் செயல்கள்தான் அவர்கள் மனங்களில் வேறுபாட்டைத் தோற்றுவிக்கின்றன.
$$$
3. பயங்கரவாதிகளின் பொட்டைத்தனம்
-ச.சண்முகநாதன்
பாரதத்தின் நெற்றியில் வெடித்த குண்டு, இந்தியாவின் ஒவ்வொரு தேசியவாதியின் உள்ளத்தில் பாய்ந்தது போல இருக்கிறது.
வெறுப்புவாதத்தில் பிறந்த தீவிரவாதம் உலகிலேயே மிகக் கொடிய விஷம். உலகின் எந்த ஜீவராசிக்கும் இல்லாத கொடிய விஷம் இந்த மத வெறுப்பு வாதம்.
பல நூற்றாண்டுகளாய் இன்னல்களை அனுபவித்து வருபவள் பாரதத்தாய். அவளுடைய மைந்தர்கள், பாரதியனாக இருந்ததற்காக மட்டுமே கண்கள் பிடுங்கப்பட்டு, கழுவிலேற்றி, யானையின் கால்களில் கட்டப்பட்டு உடல் துண்டிக்கப்பட்டு .. இப்படி எத்தனை எத்தனை இன்னல்கள் நமக்கு!
ஆண்குறியின் அடையாளம் கண்டுகொண்டு ஹிந்து என்று தெரிந்து கொண்டு இந்தக் கொலை நடந்திருக்கிறது. ஆயுதமில்லாத, நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவிகளின் ஆண்குறியை பார்த்ததும் ஒருவனுக்கு வீரம் வருகிறது என்றால் அது வீரமில்லை. பொட்டைத் தனம் .
$$$

4. நாங்கள் இருக்கிறோம் சகோதரி!
-முரளி சீதாராமன்
மகளே உன் கண்ணீருக்கு பாரதம் தனது பதிலடியால் வினை தீர்க்கும்!
எத்தனை மகிழ்ச்சியாக தேனிலவு சென்றீர்கள்!
பொசுக்கி விட்டார்களே பாவிகள் – இஸ்லாமியத் தீவிரவாதிகள்!
அன்பு மகளே…
நீ ஆற்றாது அழுத கண்ணீர் எங்கள் ஒவ்வொருவர் இதயத்தையும் துளைக்கிறது தாயே!
ஆறே நாள் மணவாழ்வு!
அத்தனையும் இஸ்லாமிய தீவிரவாத வெறியர்களால் முடித்து வைக்கப்பட்டது!
அப்போதும் நீ இழந்த கணவனின் இறுதி நிகழ்ச்சியில் – அந்த உத்தமனின் உடலைச் சுமந்த பெட்டியருகில் நின்று…
‘ஜெய்ஹிந்த்’ என்றாயே எங்கள் மகளே!
அழுதோம் அம்மா!
மனித உணர்வுள்ள அத்தனை இதயங்களும் உனக்காக அழுதன!
கடற்படை வீரனைக் கணவனாகப் பெற்றாய்!
இறந்த அத்தனை ஹிந்துக்களின் மரணமும் எங்களை பாதித்தது – ஆனால் உனது இழப்புதான் எங்களை ஒடித்தே போட்டது!
22 ஏப்ரல் இரவு எங்களில் பலர் தூங்கவில்லை!
23 ஏப்ரல் இறுதி நிகழ்ச்சியில் நீ உன் சோகத்துக்கிடையிலும் ‘ஜெய்ஹிந்த்’ என்றபோதும் எங்களில் பலருக்கு உறக்கம் பிடிக்கவில்லை!
மகளே! மகளே! எங்கள் குழந்தையே…
பாரத அன்னை உனக்கு இந்த இழப்பிலிருந்து மீண்டு வரும் வலிமையைக் கொடுக்கட்டும்!
கட்டிய தாலியின் மஞ்சள் மெருகு அழியும் முன்னர் உன் மாங்கல்யத்தைப் பறித்த மாபாதகர்களும்…
அவர்கள் வீட்டுப் பெண்களும் மற்றவர்களும்…
மண்ணோடு மண்ணாக அழிவார்கள்! இது திண்ணம்!
கோடிக் கரங்கள் கூடித் துடைத்தாலும் உன் கண்ணீர் வற்றாது – எமக்குத் தெரியும்!
திடம் கொள்! எழுந்திரு!
குலமகள் ஆற்றாது அழுத கண்ணீர், பகைவர்களையும், உள்நாட்டு துரோகிக் கயவர்களையும், ‘சிரிப்பு ஸ்மைலி’ போடும் வக்கிரம் பிடித்த கயவன்களையும்…
குடும்பத்தோடு கூண்டோடு அழிக்கும் மகளே!
நாங்களும் உன்னோடு சேர்ந்து முழங்குகிறோம் – ‘ஜெய் ஹிந்த்!’
$$$