உருவகங்களின் ஊர்வலம் – 75

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #75...

75. நிமிராத ஓநாய்களின் வால்கள்…

மானங்கெட்ட அமைச்சன் சொல்லாமல் விட்டவை இரண்டு:

1: ‘தமிழகத்தை ஆண்ட அத்தனை தமிழ் மன்னர்களும்
தம்மை சூரிய சந்திர குல திலகங்களாகவும்
ஸ்ரீராமபிரானின் வழித்தோன்றல்களாகவும்
மனுநீதிச் சோழன்களாகவுமே அடையாளப்படுத்திக் கொண்டனர்’…
உளுத்த நாத்திகம் ஒருவரும் பேசவில்லை.

2: ‘தமிழகத்தின் மீது(ம்) படையெடுத்து
அதை அடக்கி ஆண்ட அரக்கர்கள்
காலனிய கிறிஸ்தவர்கள் மட்டுமே.

*

பாதிரி போட்ட பிச்சையால் ஆட்சி கிடைத்ததென்றால்
சர்ச்க்குள் மட்டுமே ஆட்ட வேண்டும்-
நிமிர்த்த முடியாத வாலை.
நற்செய்திக் கூட்ட மேடைகளில் மட்டுமே செய்ய வேண்டும்
சுவிசேஷ மாடல் பிரசங்கங்களை.

வரலாறென்பது
ஆறு நாளில் உலகைப் படைத்துவிட்டு
ஏழாம் நாளில் ஓய்வெடுத்த விவிலிய உருட்டு அல்ல.

குருடரைப் பார்க்கவைப்பது…
முடவரை நடக்கவைப்பது போன்ற
கள்ளப் பாதிரித்தனங்களை
கற்றறிந்த மக்கள் முன் கடைவிரிக்கக் கூடாது.

பகுத்தறிவு பூமியில்
எந்தப் பன்னாடைக்கும்
இதைத் தட்டிக் கேட்க துணிச்சல் இதுவரை இல்லை.

அறுபடை வீடுகளில் அலகு குத்துவதையும்
திரெளபதியம்மனுக்குத் தீ மிதிப்பதையும் மட்டும்
க்ரிப்டோ கழகக் கூட்டம் கிண்டலடித்திருக்கிறது.
வரலாற்று, அறிவுப் புலங்களிலும் அதே
குறளிவித்தையைத்தான் காட்டிவருகிறார்கள்.

ஆப்ரஹாமிய வந்தேறிகள் உருவாக்கித் தந்த
ஆரிய வந்தேறிக் கோட்பாட்டை
ஆனானப்பட்ட அந்நிய எஜமானர்களே மூடிக்கொண்டு சென்ற பின்னும்
அடிமை எடுபிடிகள் விடாமல்
இழுத்துப் பிடித்து சப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

*

எதிரி தன் இலக்கில் வெகு தெளிவாக இருக்கிறான்…
தன் வார்த்தைகளில் அதைவிடக் கூர்மையாக இருக்கிறான்.
காங்கிரஸ் முக்த் பாரத்…
கழகங்கள் முக்த் தமிழகம்…
என்றெல்லாம் விழுந்து புரளுவதில்லை.

சநாதனத்தை அழிப்பேன் என்று சத்தமாகப் பேசுகிறான்…
சநாதன அழிப்பு என்றால் இந்து மதம் அழிப்புதான் என்று
அதே மேடையிலேயே அடுத்தாகப் பேசுபவன்
கேண்டீனைப் பார்த்தபடியே கிடுகிடுங்க அறிவிக்கிறான்.

நீதிமன்றத்தில் நிற்காத கேஸை
நீடித்து நடத்துவதில் தயக்கம் இருக்கலாம்.
வெகு தெளிவான வெறுப்புப் பேச்சை
விமர்சித்து வழக்கு தொடுக்கக்கூடத் தெரியாதா?

பாதிரியை விமர்சிக்கத்தான் பயம்.
பாதிரியின் முன் கைகட்டி வாய் பொத்திப்
பணிந்து நிற்பவனை விமர்சிக்கவுமா பயம்?

இந்துவை எவ்வளவு திட்டுகிறோமோ
அவ்வளவு அறுதிப் பெரும்பான்மை பெறுவோம் என்று
அரசுக் கோபுரத்தை மிதித்து
அதன் ஏறி நின்று எகத்தாளம் பேசுகிறான்.

ஓசிச் சோறாக இருந்தாலும்
சுடச் சுடச் சாப்பிடுகிறான்.
நமக்கு ஊசிப்போன சோறு கூடக் கிடைப்பதில்லை.

மத மாற்றமில்லாத பாரதம்…
மடை மாற்றமில்லாத
மண்ணின் மைந்தர்களின் வளர்ச்சி…
மரபின் பாதுகாப்பு…
என்றைக்கு நம் இலக்காக மாறும்?

‘ஓநாயே ஓநாயே… ஆட்டு முகமூடியை அகற்றிக் காட்டு’ என்று
கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தால்
மந்தை முழுவதும் பட்சிக்கப்பட்டுவிடும்.

டிரெண்ட் செய்ய வேண்டிய முதல் ஹேஷ்டேக்:
பட்சிக்கிற ஓநாய்களான பாதிரிகளிடம் எச்சரிக்கையாயிருங்கள்.

இரண்டாவது ஹேஷ்டேக்:
சாராய மாடல் அரசுக்கு
சலாம் போடுவது ஹராம் பாய்…

இந்து மட்டுமே தமிழன்
இந்துஸ்தானியம் மட்டுமே நம் தேசியம்.
எதிரி பீரங்கியுடன் களத்தில் நிற்கிறான்.
நாம் வேல் கம்பை ஏந்தக் கூடத் தயங்குகிறோம்.
இரு தரப்புக்கும் ஒருவனே வகுக்கும் வியூகம்
எதிரியை மட்டுமே வெல்ல வைக்கும்!

$$$

Leave a comment