-அரவிந்தன் நீலகண்டன், ச.சண்முகநாதன், ராஜசங்கர் விஸ்வநாதன், சக்திவேல் ராஜகுமார், எஸ்.ஆர்.சேகர்
வடக்கே இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் தமிழ்நாடு தலை வணங்கியதில்லை” என்று தமிழக சட்டப்சபையில் பேசி இருக்கிறார் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு. இவரது பேச்சிலுள்ள முட்டாள்தனமான வாதங்களையும், பொய்மையையும், கேவலமான ஹிந்து வெறுப்புணர்வையும் சாட்டையால் அடிப்பது போல முகநூலில் விளாசி இருக்கின்றனர், சில தேசபக்த உணர்வாளர்கள். அவற்றில் சில இதோ, நமது தளத்தின் பதிவாக….

1. தீராவிட இனவாதிகளின் வக்கிர சிந்தனை
-அரவிந்தன் நீலகண்டன்
இதிலிருக்கும் வரலாற்றுப் பொய்மையும் நன்றியின்மையின் புன்மையும் சாதாரணமானதல்ல.
முதலில் பொய்மை: குப்தர் காலத்தில் குப்த வம்சப் பேரரசர் சமுத்திர குப்தன் காஞ்சி நகரத்துக்குள் வந்தார். அங்கு ஆண்ட விஷ்ணுகோபன் எனும் பல்லவ மன்னரை வென்றார். சேர தேசத்துக்குள்ளும் அவரது படையெடுப்பு வெற்றிகரமாக ஊடுருவியது.
ஹர்ஷர் தென்னிந்தியாவுக்குள் வர இயலவில்லை. காரணம் புலிகேசி. புலிகேசி தமிழ்நாடாக நாம் இன்று அறியும் காஞ்சியின் மீது படையெடுத்தார். வடக்கு- தெற்கு என்று தீராவிட போலி வரலாற்றுப் பார்வையில் பார்த்தோமென்றால் புலிகேசி வடக்கர்தாம்.
இனி மிக முக்கியமாக நன்றியின்மையின் புன்மை:
பாண்டியரின் தாயாதிச் சண்டையால் இங்கே உள்ளே நுழைந்த மாலிக் காபூரின் அக்கிரமங்களும் படுகொலைகளும் தமிழகத்தில் நடந்தேறின. தமிழகத்தின் பண்பாடே உருதெரியாமல் சிதைக்கப்பட்டிருக்கும் காலகட்டம். வைதீக சமயப் பெருமக்களால் தர்மத்தைக் காக்க உருவாக்கப்பட்ட விஜயநகரப் பேரரசைச் சார்ந்த கம்பண்ண இளவரசர், அகத்திய மகரிஷியாலும் அன்னை மீனாட்சியாலும் கிடைத்த தரிசனத்தால் எழுச்சி பெற்று மதுரையை மீட்டார். சநாதன தர்மத்தின் பெருமையைப் பறைசாற்ற கோயில் கோபுரங்களை எழுப்பினார். அவற்றுள் ஒன்றுதான் இன்று நீங்கள் பெருமையுடன் தமிழக அரசு இலச்சினையாக வைத்திருக்கும் கோயில் கோபுர இலச்சினை. அவரும் உங்கள் பார்வையில் வடக்கில் இருந்து வந்தவர்தாம்.
மராட்டியர் இங்கே இம்மண்ணில் பன்னெடுங்காலம் ஆட்சி புரிந்தனர். அவர்கள் இம்மண்ணின் மிகப் பிரதானமானதோர் அறிவுசேகரமான சரஸ்வதி மஹாலை உருவாக்கினர். சத்திரங்கள் மூலம் அனைவருக்குமான கல்வியறிவையும் உணவு பாதுகாப்பையும் நல்கினர்.
தமிழ்நாட்டை எவரும் தொட்டதில்லை என்று இன்று பேசலாம். ஆனால் அதற்கான விலையைக் கொடுத்தது வடக்கு வாழ் பாரதம். அலெக்சாண்டர் இங்குவரை எவ்வித தடையுமின்றி ஊடுருவி வர முடிந்திருக்கும். ஏன் முடியவில்லை? வடக்கே சின்னஞ்சிறு ஜனபதங்கள் தொடங்கி தம்மை அழித்து, அலெக்சாண்டருக்கு அளித்த எதிர்ப்பு. கொடியோன் அலெக்சாண்டரை அம்பால் தாக்கி புறங்காட்ட வைத்த அந்த வீரம். அந்த வீரத்தை வடக்கின் வீரமாக நாம் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த பாரதத்தின் வீரமாகவே காண்கிறோம்.
தில்லி சுல்தானியர் இங்கே வராமைக்குக் காரணம் அங்கு தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஹிந்து வீரர்களின் எதிர்ப்பு. நேருவிய வரலாற்றில் சொல்லப்படாவிட்டாலும், வரலாற்று ஆவணங்களில் மக்களின் மனங்களில் பதிந்துள்ள வரலாற்று சத்தியம் அது.
மொகலாயக் கொடுங்கோலன் கொலைவெறி ஔரங்கசீப் இங்கே வந்து அதே கொடுமைகளைச் செய்யமுடியாமல் போனதற்குக் காரணம், மராட்டியரும் கன்னடியரும் ரத்தம் சிந்திச் செய்த பலிதானம்; அதையும் தாண்டி அவனது கொடுங்கோல் கரங்கள் இங்கு நீண்டபோது அவற்றுக்கு சரியான அடி கொடுத்த மராட்டிய வீரசரிதம் திருவண்ணாமலையிலும் எழுதப்பட்டது.
நாம் இங்கு எவரையும் தெலுங்கராக, கன்னடராக, மராட்டியராகப் பார்க்கவில்லை. வட பாரதம் போல கோயில்கள் சிதையாமல், வாழ்வு நெறி மாறாமல் நம்மைக் காப்பாற்ற உதிரம் சிந்தி தம்மை அழித்துக் கொண்ட வட பாரதத்தின் ஆதிக்க எதிர்ப்பு சக்திகளை – ராணா சங்கா, ராணா பிரதாபர், குரு கோவிந்த சிம்மர், பலிதானிகளான அவரது புத்திரர்கள், வீர சிவாஜி, சத்ரபதி சத்ரசால் என அனைவரையும் வணங்குகிறோம். வடக்கே அவர்கள் தம் வாழ்க்கைகளை அழித்துக் கொண்டதால், தெற்கே நாம் செழித்து வாழ்கிறோம்.
நன்றி மறப்பது நன்றன்று என்றார் தெய்வப்புலவர். திராவிட இனவாத அரசியல் செய்யும் சிறுமதிப் புல்லியரோ தெய்வப்புலவர் திருவள்ளுவரை அரசியலுக்கு வெளியே அறியாத அற்பர்கள்.
இதிலிருக்கும் நன்றி கெட்ட தன்மையின் சிகரம் ஔரங்கசீப்புக்கு இந்த அமைச்ச‘ர்’ கொடுத்திருக்கும் அடைமொழியும், வீரசிவாஜிக்கு அளித்திருக்கும் பெயரும். வக்கிரத்தை பகுத்தறிவு என்று அரிதாரம் பூசி ஆடும் அளவுக்கு மானம் கெட்ட போக்கை தீராவிட இனவாதிகளிடம் மட்டுமே காணமுடியும்.
$$$
2. தமிழ்நாட்டைக் காத்த தனயர்கள் யார்?
-ச.சண்முகநாதன்
“யாரும் எங்களை வெல்ல முடியவில்லை. இந்த வரலாறு எங்கள் தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தான வரலாறு” – இப்படி விவரம் தெரியாத, உணர்ச்சிவசப்படக்கூடிய கடைநிலை கட்சிக்காரன் பேசியிருந்தால் பரவாயில்லை. ஆனால் ஒரு அமைச்சர் தமிழக சட்டசபையில் இப்படி பேசுவது அசிங்கம், அறியாமையின் உச்சம்.
வரலாறு தெரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்கக் கூடவா துப்பில்லை?
அதுவும் அறிக்கையில் கொடுங்கோலன் ஒளரங்கசீப்பை ‘Emperor of the universe’ என்றும், இந்த மண்ணின் மைந்தன் சத்திரபதி சிவாஜியை ‘மலைகளின் எலி’ என்ற அடைமொழியோடும் பேசியிருப்பது வெட்கக்கேடானது.
உண்மையைச் சொன்னால் தோராயமாக 1350க்குப் பின் தமிழ்நாட்டை பெரிதாக தமிழன் ஆளவே இல்லை.
சில தமிழ்த்தேசியப் போராளிகளும் இதே போன்ற பரப்புரையை அவ்வப்போது செய்து வருவது வழக்கம்.
உண்மை இதுதான்:
“Marthas Kingdom 1674-1855. The Thanjavur Maratha kingdom of the Bhonsle dynasty was a principality of Tamil Nadu between the 17th and 19th centuries. Their native language was Marathi.
The Madurai Nayaks were Telugu rulers 1529–1736″
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனின் தாய்மொழி மராத்தி.
விஜயநகரப் பேரரசை உருவாக்கியவர்கள் கன்னடர்.
அதன் வழித் தோன்றலான நாயக்கர்களின் தாய்மொழி தெலுங்கு.
ஆனால் இவர்கள் எல்லோரும் தமிழையும் இந்திய கலாச்சாரத்தையும் போற்றி வளர்த்தனர்.
‘Delhi sultanate’ மதுரையை துவம்சம் செய்து – நமது துரதிர்ஷ்டம் – நம்மை கொஞ்ச நாள் ஆண்ட கதை தெரியுமா? அவர்களை மதுரையை விட்டு விரட்டியது விஜயநகரப் பேரரசு என்பது தெரியுமா?
முகலாயப் பேரரசு தமிழகத்தில் பரவாமல் இருந்ததற்குக் காரணம் இதே விஜயநகரப் பேரரசு. (ஹரிஹரர், புக்கர்) அவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இது தெரியாமல் “எங்களை யாரும் வெல்லவில்லை” என்று சொல்வது, வேறு யாரோ பெற்ற பிள்ளைக்கு தன் இனிஷியலை வைப்பது போன்றது.
எனவே, அமைச்சரே, உன்னை மராத்தியன் ஆண்டான், கன்னடரும் தெலுங்கரும் ஆண்டு வந்திருக்கின்றனர். இப்போதும் ஒரு குஜராத்தி இந்தியன் தான் இந்த ஒருங்கிணைந்த இந்தியாவின் பிரதமர்.
இனிமேல் இந்த மாதிரி அறிவுக்குப் புறம்பான விஷயங்களை நம்புவதற்கு முன் உங்கள் முப்பாட்டனின் வரலாற்றைப் படியுங்கள்.
1311இல் சுந்தர பாண்டியன், போயும் போயும், மாலிக் காபூரிடம், உரிமைப்போரில் தனக்கு உதவுமாறு கெஞ்சிக்கேட்டது தெரியுமா? மாலிக் காபூருக்கும் மதுரைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியுமா?
வீழ்த்தப்பட்டது கூட தெரியாமல் இப்படி வெற்றறிக்கை விடுவது என்ன மனநிலை?
அன்றும் இன்றும் மிலேச்சர்கள் தமிழனைச் சிதைத்து விடாமல் இருப்பதற்கு காவலாய் இருப்பவர்கள் வடக்கே இருப்பவர்கள் என்று வரலாறு சொல்கிறது.
நாம் பெருமை கொள்ள தமிழில் தமிழகத்தில், தமிழில் வேறு நூறாயிரம் காரணங்கள் இருக்கின்றன.
வெட்கித்துத் தலை குனியவும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.
நன்றியுணர்வுடன் வடக்கே கையெடுத்து கும்பிடவும் சில காரணங்கள் இருக்கின்றன.
‘அவர்கள்’ நம்மை வென்றிருக்கிறார்கள், நம்மை ஈவு இரக்கமில்லாமல் கொன்றிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தமிழரல்லாத இந்தியர்கள் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அந்த பிறருக்கு நன்றி செலுத்துவதன் மூலம் நன்றியுணர்வில் ‘நம்மை யாரும் வெல்ல முடியாது’ என்று பெயர் வாங்குவதே தமிழனின் தனிச் சிறப்பாக இருக்க முடியும்.
$$$
3. போலி வரலாறுகளால் மாற்ற முடியாது!
-ராஜசங்கர் விஸ்வநாதன்
விஜயநகரப் பேரரசும் நாயக்கர்களும் மராத்தியர்களும் ஹொய்சாளர்களும் இல்லாமல் இருந்திருந்தால், இன்னேரம் தமிழ் என்ற மொழியே இருந்திருக்காது.
வெற்றி மட்டுமே கண்ட வீரரான குமார கம்பண உடையார் தம்முடைய திருத்தேவியார் கங்கமாதேவியாரோடு எழுந்தருளி, மிலேச்சக் கும்பலால் சிதைக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை மீட்டெடுத்தார்.
அப்போது 50 வருடங்கள் மதுரை மண்ணிலே வழிபாடு என்பதே அற்றுப் போயிருந்தது. அதன் மிச்ச எச்சங்கள் இன்றும் இருக்கின்றன.
விஜயநகரப் பேசரரசுக்கும் முந்தையதான ஹொய்சாளர் எனும் போசளர்களின் மன்னரான வீர வல்லாள தேவர் தன் இன்னுயிரையும் தந்து தமிழக கோயில்களைக் காத்தருளினார்.
இன்றைக்கும் திருவண்ணாமலையிலே அண்ணாமலையாரே தன்னுடைய பக்தன் வீர வல்லாள தேவருக்கு வருடப்படி திதி கொடுத்து நினைவு கூர்கிறார்.
வீரத்தின் அடையாளமாய் பல்லாளன் எனும் வீரவல்லாள தேவர் இன்றைக்கும் திருவண்ணாமலையிலே நினைவு கூரப்படுகிறார்.
ஹொய்சாளர்களின் கோயில் கட்டடக் கலைகள் சோழர்களைப் போலவே சிறப்பு வாய்ந்தவை.
பின்பு மிலேச்சர்களால் தமிழகம் சூழப்பட்டபோது, பேரரசர் சிவாஜியே தமிழகத்துக்கு எழுந்தருளி மிலேச்சக் கூட்டத்தை விரட்டி கோயில்களிலே வழிபாடு நடக்க வழி செய்தார்.
அதன்பின்பும் மராட்டிய மாதரசி பேரரசி அஹல்யாபாய் ஹோல்கர் எழுந்தருளி கோயில்களை மீட்டெடுத்துக் கட்டி புனித கங்கை நீர் தமிழக கோயில்களுக்கு வரும்படி சாசனம் செய்தார்.
பின்பு ஆங்கிலேய ஆட்சியிலே சரஸ்வதி மஹால் நூலகத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல போட்டப்பட்ட திட்டத்தை, தஞ்சாவூர் மன்னரின் துணைவியாரான காமாஷி பாயி சட்டப் போராட்டம் நடத்தி தடுத்தார்கள்.
சரஸ்வதி மஹால் நூலகம் கட்டி தமிழ் நூற்களைப் பாதுகாத்தது மதுரை நாயக்க மன்னர்கள் தான்.
இதெற்கல்லாம் முன்னார் இன்றைய ராஜஸ்தானிலே மேவார் மன்னர் பப்பா ராவல் அவர்கள் மிலேச்ச கூட்டத்தை எதிர்க்க பாரதம் முழுவதும் ஓலை அனுப்பி வரச்சொன்ன போது
இங்கே இருந்து பெரும் படை போனது. படையெடுத்த வந்த மிலேச்ச கும்பல் ஒன்றுமே இல்லாமல் அழிக்கப்பட்டது.
அதன் பின்பு 200 வருடம் இங்கே பாரதத்திலே அமைதி நிலவியது.
ஆனால் இந்த வீரவரலாறுகளை எல்லாம் மறைத்து என்ன பேசுதுகள் என பாருங்களேன்.
பாரதம் முழுக்க சனாதனிகள் ஒருவருக்கொருவர் உதவி செய்தும் படையெடுப்பு வந்தால் தோளோடு தோள் நின்று போரிட்டும் தான் வந்துள்ளார்கள்.
அதையெல்லாம் இதுபோன்ற போலி வரலாறுகள் மூலம் மாற்ற முடியாது.
$$$
4. சின்னப் பையன்களுக்குத் தெரியாது!
-சக்திவேல் ராஜகுமார்
தங்கம் தென்னரசு என்ற அமைச்சர் – நிதி அமைச்சர் – தான் ஒரு அடிமுட்டாள் என்று நிரூபிக்கும்படி பேச, அந்தப் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கைதட்டி தாங்களும் அவருக்கு சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்திருக்கின்றனர் .
அவரது பேச்சும் பதிலும்:
1. அலெக்ஸ்சாண்டரின் வெற்றிப் பாதையில் தமிழகம் இருந்ததில்லை.
அடப்பாவி, சிந்து நதி கடந்து அதன்பின் நடந்த ஒரே ஒரு போருக்குப் பின் அடுத்தது கடல்தான் இருக்கிறது என்று பொய் சொல்லி வீரர்களை திருப்பி அழைத்து சென்ற வீரரல்லவா அலெக்ஸ்!
அவர் கீழே குஜராத், மராட்டம், இதர தென்னகத்துக்கும்தான் வரவில்லை. விட்டால் ட்ரம்பின் ஆணை இங்கே தளபதியிடம் செல்லாது என்பீர்கள் போல …
2. மௌரியப் பேரரசர் சந்திர குப்தரால் தமிழக எல்லையைக் கூட தொடமுடியவில்லை
அவர்தான் தென்னகப் படையெடுப்பையே நடத்தவில்லையே . மௌரிய சாம்ராஜ்யம் அவரே உருவாக்கியதால் அதை ஸ்திரப்படுத்தவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது .ரோடில் எதிர்த்த பக்கம் சும்மா நடந்து போகிறவனைக் காட்டி அவனால் என்னை அடிக்க முடியாது என்பீர்களா?
3. புத்தர்களின் காலம் சமுத்திர குப்தர்களின் காலடி இந்தத் தமிழ் மண்ணில் படவே இல்லை .
புத்தர் காலத்தில் மகத ராஜ்யம், கோசல ராஜ்யம் இருந்தது. சமுத்திர குப்தர் பொது யுக அரசர். கௌதம புத்தர் பொது யுகத் துக்கு முன்பு … இப்படி அடிப்படை சொல்லித்தர வைத்து நேரம் வீணாக்கலாமா அமைச்சரே?
4. கனிஷ்கர், அக்பரால் தமிழகத்தைத் தொட முடியவில்லை .
அதே பதில்தான் . கனிஷ் கர் 2ஆம் நூற்றாண்டு; மொகலாயர்கள் 16 ஆம் நூற்றாண்டு ..
ஏன் உலக நாடுகள் அனைத்தையும் பட்டியலிட்டு அவர்களால் எங்களைத் தொடமுடியவில்லை என்று சொல்லுங்களேன்.
5. ‘உலகின் சக்கரவர்த்தி’ ஔரங்கசீப்பால் கூட முடியவில்லையாம்.
அந்த மதவெறியன் அமைச்சர் நினைத்த அளவுக்கு பெரிய ஆள் இல்லை. அரசனான பின் தில்லியை விட்டு வெளியே வரவே பயந்தான். அப்படி வந்தவனை பெண்ணான தாரா பாயே கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் . அப்புறம் அப்படி வெளியே வந்தவன் பின் திரும்பிப் போகவே இல்லை.
அவனாவது தமிழகத்தைப் பிடிப்பதாவது …தக்காணத்தையே பிடிக்க முடியாதவன்.
அப்புறம், அவன் மலை எலி என்றால் நீங்களும் சொல்வீர்களா? மராட்டாவில் இதே வார்தைகளைச் சொல்லி இருந்தால் உங்கள் கதை என்ன ஆகி இருக்கும் தெரியுமா?
6. ஔரங்கசீப்பால் மலை எலி என்று அழைக்கப்பட்ட சிவாஜியால் தமிழ் நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை.
இது விஷமத்தனமான பேச்சு. ‘மலை எலி’ என்று மட்டுமா ‘காபிர்கள்’ என்றுகூடத்தான் ஔரங்கசீப் சொன்னான். அதை எல்லாம் சொல்ல முடியுமா?
மராட்டியப் படைகள் செஞ்சி தாண்டி தஞ்சாவூர் வரை ஆண்ட சரித்திரம் தெரியாதா? சரபோஜி மன்னர் சரஸ்வதி மஹால் நூலகம் எல்லாம் தெரியாதா?
ரொம்பக் கேவலமாக இருக்கிறது மந்திரிகளின் பேச்சு.
எதெற்கெடுத்தாலும் வடக்கன், அழுக்கு, பிரிவினை பேசுகிறீர்கள்.இதே முறையில் அவர்களும் பேச ஆரம்பித்தால் என்ன ஆகும்? அடிப்படை அறிவு இல்லையா?
அடுத்ததாக அவர் சொன்ன விஜயநகரப் பேரரசு, புக்கரின் மகன் குமார கம்பண்ணன் அவர் வழித்தோன்றல்கள் இரண்டரை நூற்றாண்டுகளாக சரித்திரத்தின் போக்கையே மாற்றி ஹிந்து சாம்ராஜ்யம் அமைத்து மதுரையை ஆண்டது, சரித்திரம் தெரியாத தங்கம் தென்னரசு போன்ற சின்னப் பையன்களுக்குத் தெரியாது .
$$$
5. செங்கிஸ்கான் தமிழ்நாட்டுக்கு வர முடியவில்லை!
-எஸ்.ஆர்.சேகர்
வரலாறு என்பது பெரியார் திடலில் எழுதப்படவில்லை தங்கம் தென்னரசு அவர்களே.
சம்பந்தமே இல்லாமல் பல பொய்களை, சட்டசபையில் பேசினால் அவை உண்மையாகிவிடுமா, அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களே!
முன்னர் ‘மதராஸ் மாகாணமாக’ இருந்த, பரந்து விரிந்த தமிழ் பேசும் மக்கள் நிறைந்த நிலப்பரப்பை தமிழ்நாடு என்று இவர் குறிப்பிடுகிறாரா…
அல்லது சுதந்திரத்திற்குப் பின்பு வரையறுக்கப்பட்ட ‘தமிழ்நாடு’ மாநிலத்தைக் குறிப்பிடுகிறாரா என்பதை முதலில் விளக்க வேண்டும்.
சட்டசபையில் இவர் சரித்திரமே தெரியாத கழங்கிகளுக்கு முன் குறிப்பிட்டது – கும்மிடிப்பூண்டிக்குக் கீழே கன்னியாகுமரி வரையிலான தமிழகத்தைத் தான்.
பிறகு இன்னொரு விஷயம்…
பாரத தேசத்தின் வளத்தைக் கண்டு தான் அலெக்சாண்டர் படை எடுத்து வந்தாரே தவிர , தமிழகம் என்ற குறிப்பிட்ட நிலப்பரப்பிற்காக அல்ல!
அந்த அலெக்சாண்டரையும் சிந்து நதிக் கரையிலேயே புருஷோத்தம மன்னர் போரிட்டு திருப்பி அனுப்பிய சரித்திரம் இவருக்குத் தெரியாது என்பது இப்போது வெட்ட வெளிச்சமானது.
அது ஒரு புறம் இருக்கட்டும்…
இவர் கூறிக் கொண்டிருக்கும் லிஸ்டில் இவரைப் போல நாமும் இஷ்டத்துக்கு பலரையும் சேர்க்கலாம்…
- செங்கிஸ்கான் படையெடுப்பு தமிழ்நாட்டுக்கு வரவில்லை!
- ஜூலியஸ் சீசர் படை எடுப்பு தமிழ் நாட்டுக்கு வரவில்லை!
- முசோலினியும் ஹிட்லரும் தமிழகத்தில் நுழைய முடியவில்லை!
என்று கதை மேல் கதை அளந்து கொண்டே போகலாம்…
ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் விந்திய மலைக்குக் கீழே பெருவாரியாக படையெடுப்பு நடத்த முடியாததற்கு காரணம்….
விந்திய மலைக்கு மேலே அரணாக இருந்த ஹிந்து, ராஜபுத்திர அரசர்கள் என்பது அமைச்சருக்கு ஏன் தெரியவில்லை? சரித்திரப் பாடத்தில் ரொம்ப ‘வீக்’கோ?
தக்காண பீடபூமியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஔரங்கசீப்புக்கு இருந்தது… அதாவது தமிழகத்திற்கு மேலே இருக்கும் நிலப்பரப்பையே அவர்களால் தொட முடியவில்லை என்பது சரித்திரத்தின் நிதர்சனம்…
சத்ரபதி சிவாஜி கனவு கண்ட (மராட்டா ) ஹிந்து சாம்ராஜ்யம் தமிழகத்திற்குள் எவ்வளவு தூரம் வியாபித்து இருந்தது என்ற ஆறாம் கிளாஸ் வரலாறு பாடப் புத்தகத்தை அமைச்சர் படித்திருந்தாலே, கொஞ்சம் வரலாறு தெரிந்திருக்கும்.
ராத்திரி, பிரத்தியேகம், கம்மி, ஜாஸ்தி, தாம்பூலம் போன்ற வார்த்தைகள் சத்ரபதி சிவாஜி அவர்களின் சாம்ராஜ்யத்தில், மராட்டிய மொழியில் இருந்து நேரடியாக தமிழுக்கு வந்த வார்த்தைகள்!
தமிழ்நாட்டின் உணவு என்று நினைத்துக் கொண்டிருக்கும் சாம்பாரும் அந்த மராட்டா சாம்ராஜ்யத்தில் சத்ரபதி சம்பாஜிக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு உணவு தான்!
வடக்கில் இருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இந்த நிலப்பரப்பை ஆண்டவர்களா இல்லையா என்பது பிரச்னை இல்லை….
ஆனால்-
வடக்கிலிருந்து தமிழகத்தின் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்த இந்திரா காந்திக்கும், சோனியா காந்திக்கும், ராகுலுக்கும், திமுக கொத்தடிமையாக இருந்து தமிழக உரிமைகளை தாரை வார்த்தது தான் பிரச்னை!
இந்த வெட்டி வீர முழக்கங்கள் இடுவதை நிறுத்தி, சாராயக் கடைகளில் பத்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் அதிகம் வாங்கித் திருடிக் கொழிக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் தருவதில் கவனம் செலுத்தவும்.
$$$