ஸ்ரீ ராமாநுஜரும் சமத்துவமும்: நூல் மதிப்புரை

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள ஸ்ரீராமானுஜரும் சமத்துவமும் (2023) பல விதங்களில் ஒரு முக்கியமான நூல். நூலாசிரியர் சிறந்த கவிஞர், சிந்தனையாளர். தத்துவம், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் ஆழ்ந்து சஞ்சரிப்பவர். இந்தப் புத்தகத்தை எழுதியதற்கான காரணமாக அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குரிய விஷயம்.