-ராஜசங்கர் விஸ்வநாதன், வெ.ஜீவானந்தன்
அண்மையில் வெளியான இரு படங்களை (அமரன், கங்குவா) அலசுகிறார்கள், பொருள்புதிது வாசகர்கள் இருவர்…

1. உபதேசிகள் உதைபட வேண்டியது தான்!
-ராஜசங்கர் விஸ்வநாதன்
மரண மொக்கையான படங்களை எடுத்து, அதை திரையரங்கிலே வெளியிடாமல் ஓடிடி தளத்திலே வெளியிட்டு, நாலஞ்சு யூடீயூபர்களை வைத்து ஆகா ஓகோ புரச்சி புண்ணாக்கு என பேசவைத்து, பெரிய சாதனை படைத்ததாக காட்டிக்கொண்ட ஆட்கள்.
இப்போது திரையரங்குகளிலே படம் வந்து மக்கள் கழுவி ஊற்றியவுடனே,
“யூ-டியூப்பிலே திட்டுகிறார்கள்…
படத்தை பார்த்தா பிடிக்காட்டி ஏதும் சொல்லாம போ…
இவ்வளவு பேர் வேலை செஞ்சு இருக்காங்களே…”
என்று உருட்டுகிறார்கள்.
பிராமணரை தப்பாக காட்டி ஒரு புரட்சிப் படம்…
தப்பு செஞ்ச பேர் வைக்காத ஆளை மாத்தி காமிச்சு அதிலே சாதிவெறிய தூண்டி ஒரு படம்….
இப்படி எடுத்து வெளியிட்டபோது குளூகுளூன்னு இருந்துச்சா?
அதுவும் அந்த சாதிவெறியைத் தூண்டிய படத்திலே, ஏன் இன்னோர் சாதி வந்து உதவி செய்யவில்லைன்னு கேள்வி வேறு.
இதே இரைச்சல் மட்டுமே இருக்கும் படத்தை (கங்குவா) ஓடிடி தளத்திலே விட்டிருந்தா இன்னேரம் என்னென்ன உருட்டியிருப்பானுக?
டமில் சினிமா என்பது தன்னுடைய சுய சிந்தனையையும் சுய உருவாக்கத்தையும் சுய படைப்பாற்றலையும் இழந்து 20-30 வருடங்கள் ஆகின்றது.
காரணம் ஒன்றே ஒன்று தான்.
ஒரு பக்கச் சார்பாக இருந்து, பெரும்பான்மை மக்களை வெளியேற்றி, மர்மான ஆட்கள் போதும் என நின்றது தான்.
உடனே, பக்கத்து மாநிலத்திலே என ஆரம்பிக்க வேண்டாம்.
மலையாள சினிமா ஒன்னும் இவர்கள் உருட்டுவதுமாதிரி ஓகோ என்றெல்லாம் கிடையாது.
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை கணக்கு தான்.
அது என்ன படம்? சமீபத்திலே அந்த குணா குகையிலே போய் மாட்டிக்கொள்வதாக வந்த படம்?
அந்தப் படத்தை ஐந்து நிமிடம் பார்க்க முடியுமா?
முடியாது.
அதற்கு இந்த இதே யூடீபர்கள் பாராட்டி ஓட வைத்தார்கள் என ஆன போது நன்றாக இருந்ததா?
ஹாலிவுட் படங்கள் ஏன் உலகமெங்கும் ஓடுகிறது என்றால், அங்கே வாங்கின காசுக்கு மெனக்கெட்டு வேலை செய்வார்கள்.
படைப்புக்களை நாவலாக எழுதும் காமிக்ஸ் என சித்திரக்கதைகளாக எழுதும் ஆட்களிலே இருந்து வாங்கி, அவர்களுக்கும் மதிப்பு கொடுத்து நல்ல பணம் கொடுத்து, அதை திரைப்படமாக மாற்றி எடுப்பார்கள்.
அங்கே புதியதான கதைக்கருக்கள் வந்து கொண்டே இருக்கும்.
இங்கே இருப்பது போல, நாலு பாட்டு, நாலு சண்டை, இரண்டு சென்டிமென்ட், ஹீரோ வசனம் பேசுவது என ஒரே மாவையே அரைக்க மாட்டார்கள்.
மந்திரம், மாயாஜாலம், விஞ்ஞானக் கற்பனை, சமூகத்திலே நடப்பது, சண்டை போடுவது, வரலாறு என விதம்விதமாக எடுப்பார்கள்.
ஏனென்றால், அது படைப்பாற்றல் மிக்க ஆட்களால் நிறைந்திருக்கிறது.
செய்யும் தொழிலுக்கு மதிப்பு கொடுப்பார்கள். நூற்றுக்கு நூறு சரி இல்லை என்றாலும் நூற்றுக்கு 99 சதம் சரியாக இருக்கும்.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது?
ஓவர் பில்டப் கொடுத்து, முதல் நாளிலேயே போட்ட பணத்தை – ஆயிரம் திரைகள், இரண்டாயிரம் திரைகள் என போட்டு எடுத்துவிடுகிறார்கள்.
ஆயிரம் திரைகள், திரைக்கு 200 பேர் என வைத்தாலே முதல் நாளிலேயே இரண்டு லட்சம் பேர் பார்த்துவிடுகிறார்கள்.
இரண்டு லட்சம் பேர் பார்த்து கருத்து சொன்னால் கழுவித்தான் ஊற்ற முடியும்.
டிக்கெட் 100 ரூபாய் என வைத்தாலே 20 கோடி வந்துவிடுகிறது.
அவ்வளவு தான் பட்ஜெட்டே இருக்கும். 300 கோடி, 400 கோடி என்பதெல்லாம் டுபாக்கூர் என்றே நினைக்கிறேன்.
அடுத்து என்னவென்றால், “படத்தை மட்டும் பாருங்க… அதிலே நடித்தவர்கள் கருத்து சொன்னதை எல்லாம் பார்க்காதீங்க” என.
எப்படி உருட்டு? ஸ்பெஷல் உருட்டு.
இந்த நடிக்கும் ஆட்கள், சினிமாவிலே வேலை செய்யும் ஆட்கள், சமூக்க் கருத்து சொல்லலாம்.
சமூக கர்த்தூஊ, புரச்சி, புண்ணாக்கு என மெசேஜ் குறியீடு வைத்து படம் எடுக்கலாம்.
அது எல்லாம் ஜனநாயக உரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை.
ஆனால் மக்களுக்கு அதே கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை இல்லையா?
எல்லாருக்கும் ஒரே சட்டம் தானே?
அதுவும் இதே சினிமாவை வைத்து தானே பிரபலம் ஆனதுகள்?
சினிமாவிலே நடிக்காவிடில் இந்த செல்தட்டி குடும்பம் என்றால் யார் என தெரிந்திருக்குமா?
அப்புறம்?
இதுதான் மேட்டிமைவாதம். பணத்திமிர்.
பணம் சம்பாதிக்கும்போது, சினிமா என்பது கருத்து சொல்லும் இடம்
மக்கள் திருப்பி கேள்வி கேட்டால், உடனே இவ்வளவு பேர் வேலை செய்திருக்கிறார்களே என உருள்வது.
இதை வேற, புரச்சி- புண்ணாக்கு என எடுத்துட்டு வருதுக.
நாம ராக்கெட் விட்டால், “ஐயோ விவசாயிகள் ஏழைகளாக இருக்கிறார்கள், இப்போது ராக்கெட் விடுவது தேவையா?” என கேட்ட ஆட்கள் தான்,
நாலு சினிமாவே நடித்துவிட்டதால் கர்த்தூஊ சொல்லும் ஆட்கள் ஆகி விடுகிறார்கள்.
எனவே ராக்கெட் விட்டாலே விவசாயிகள் ஏழையா இருக்கும்போது, 200 ரூபாய் கொடுத்து படம் பார்த்தால் விவசாயிகள் மனம் புண்படாதா?
எனவே அந்தப் பணத்தை ஒரு ஏழை விவசாயிக்குக் கொடுத்து விவசாயிகளை வாழ வைப்போம்.
வாழ்க விவசாயிகள்!
வாழ்க சமத்துவம்!
வாழ்க சமூகநீதி!
வாழ்க ஜனநாயகம்!
$$$
2. முழுமையான வணிகப் படம்
-வே.ஜீவானந்தன்
சமீபத்தில் பார்த்த தமிழ் திரைப்படங்களில் ஒரு perfectly made commercial படம் ’அமரன்’ என்று நான் கருதுகிறேன். (இதற்கு முன்னால் பார்த்த பெரிய படம் வேட்டையன்).
பொதுவாக ராணுவ சாகசப்படங்கள் போர்ப்படங்களாகவும் பல சமயங்களில் bore படங்களாகவும் இருப்பது சகஜம். ஒரு பயோகிராபி படம் என்றால் இன்னும் ரிஸ்க் தான். இந்த படம் வெளியானதில் கமல் ஹாசனுக்கும் ரெட் ஜயண்ட்டுக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கிறது. வேறு யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் இதன் கதி என்ன ஆகியியிருக்குமோ தெரியாது.
துப்பாக்கி சண்டை, பெரும் கூட்டங்கள், ரியலிஸ்டிக் லொகேஷன்கள், ராணுவ அணிவகுப்பு, காதல் வயப்படும், மற்றும் சம்பந்தம் பேசும் காட்சிகள் அனைத்தையும் சிரத்தையெடுத்து செய்திருக்கின்றனர்.
சிவ கார்த்திகேயனுக்கும், சாய் பல்லவிக்கும் நான் எப்போதும் ரசிகன் இல்லை. இந்தப் படத்தில் பிடித்துப் போய்விட்டது, குறிப்பாக மறைந்த என் நண்பர் வேணுவின் பக்கத்துவீட்டுக்காரப் பெண்ணை! …பிரமாதமான performance சாய் பல்லவியுடையது.
மலையாள நடிகர்கள் தேர்வும் கச்சிதம். எனக்கு பிடித்த இயக்குநர் ஷியாமா பிரசாத்தை, கதாநாயகியின் தந்தையாக பார்த்ததில் மகிழ்ச்சி!
மால் தியேட்டர்களில் நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தியேட்டரில் மொத்தம் ஏழு பேரோடு பார்த்தேன்!
$$$