மக்கள் தலைவர் வ.உ.சி.: நூல் அறிவிப்பு.

-ரெங்கையா முருகன்

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தமிழகத்தில் சுதேசி நெருப்பைப் பற்றவைத்த தீரர் பெரியவர் வ.உ.சி. அவர்கள் குறித்த சிறிய நூலை வெளியிடும் அளப்பரும் முயற்சி குறித்த தகவல் இது... இந்நூலை வாங்கிப் பயனடைவோம்!

"ஆம்.பாரதியார் அழுத கண்ணீர் மீது ஆணை வைத்து கூறுகின்றேன் தமிழர்களே! நன்றி மறவாதீர். சிதம்பரனாரின் நினைவுநாள் வரும் நவம்பர் 18 ஆம் தேதி வருகின்றது. கல்லூரி மாணவர்களே! தொழிலாளர்களே! எழுத்தாளர்களே! கல்விக்கூட ஆசிரியர்களே! உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்! தமிழகத்தின் ஆதித் தலைவனுக்கு, தமிழ்த்தாயின் வீரப்புதல்வனுக்கு தலை வணங்குங்கள். அவர் துவக்கி வைத்த சுதந்திரப் போர் வெல்க என்று முழங்குங்கள்! அவரைப் பெற்றெடுத்த வீரத் தமிழ் மரபு வாழ்க என வாழ்த்துங்கள்.வாழ்க சிதம்பரனார் நாமம்".

      -ம.பொ.சி,1946,  ‘தமிழ் முரசு’ கட்டுரையின் ஒரு பகுதி.

ம.பொ.சி. அன்று போட்ட விதை இன்று பெரிய அளவுக்கு,  தகைசால் மன்னர் பெரியவர் வ.உ.சி.புகழ் பரவியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் கோவில்பட்டி மாரீஸ் அவர்களின் சிறப்பான வடிவமைப்பில் 32 பக்கம் கொண்ட  ‘மக்கள் தலைவர் வ.உ.சி’ 5000 பிரதிநிதிகள் அச்சிடப்பட்டு இரண்டே நாட்களில் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விற்று தீர்ந்து போனது. அதன் பிறகு தொடர்ந்து பலர் இந்த புத்தகம் கிடைக்குமா? இல்லை எப்பொழுது மறுபதிப்பு செய்வீர்கள் என்று அலைபேசி வாயிலாக விசாரித்து வந்தனர்.

வரும் நவம்பர் 18ஆம் தேதி பெரியவர் வ.உ.சி.யின் 87ஆம் ஆண்டு நினைவு தினம் ‘தியாக திருநாள்’ ஆக தமிழகம் முழுமைக்கும் கொண்டாட இருப்பதால்,  ‘மக்கள் தலைவர் வ.உ.சி.’ நூலை மீண்டும் 5000 பிரதிகள் அச்சடிக்க எண்ணியிருக்கிறோம்.

கடந்த செப்டம்பர் மாதத்தை விட இந்த மாதம் காகித விலை பெரும் அளவுக்கு உயர்ந்த காரணத்தால் பிரதி ஒன்று ரூ.15/- என விலை வைத்திருக்கிறோம்.

பெரியவர் வ.உ.சி.யை வணிக நோக்கில் கொண்டு செல்வதைத் தவிர்க்கவே லாபநோக்கற்ற முறையில் – ஒரு காபி மற்றும் டீ குடித்தால் கூட ரூ.20/- ஆகும் சூழலில்-  பெரியவர் வ.உ.சி. குறித்த வரலாறு அனைவரிடமும் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தில், மீள் பதிப்பு கொண்டு வந்துள்ளார் கோவில்பட்டி மாரீஸ் அவர்கள்.

கல்லூரி பேராசிரியர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள், தொழிலாளர் இயக்கங்கள், அரசியல் அமைப்புக்கள், சங்க அமைப்புக்கள் இந்த நூலை அனைவரும் குறைந்தது 50 பிரதி முதல் நூற்றுக்கு மேற்பட்ட பிரதிகள் வாங்கி பெரியவர் வ.உ.சி. நினைவு தினம் அன்று அன்பளிப்பாக வழங்குங்கள். பெரியவர் வ.உ.சி.வரலாற்று வாசிப்பு கூட்டம் நடத்துங்கள்.

கண்ணைக் கவரும் அழகிய அச்சு, பொருத்தமான ஆளுமைகளின் படங்கள், உள்ளத்தை ஊன்றிச் செல்லும் பெரியவர் குறித்த துணுக்குச் செய்திகள், அரிதினும் அரிய செய்திகள் அடங்கிய இந்த நூலினை வாங்க முன்பதிவு செய்யுங்கள். பதிவுக்கு முந்துபவர்களுககு மட்டுமே பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். கூரியர் சார்ஜ் தனி.

 ‘மக்கள் தலைவர் வ.உ.சி.’ புத்தகம் வேண்டுவோர், 63829 74932  என்ற Whatsapp எண்ணுக்கு, எத்தனை புத்தகம் தேவை என்பதையும்,  உங்கள் முகவரியையும் குறிப்பிட்டு செய்தி அனுப்புங்கள்.

பணம் அனுப்ப வேண்டிய விவரங்கள், உங்கள் Whatsapp எண்ணிற்கு வரும்.

 $$$

Leave a comment