அறிவுலகில் நீலகண்ட சாஸ்திரியும் (சோழர்கள்), பொதுவெளியில் கல்கி வார இதழில் தொடராக கிருஷ்ணமூர்த்தியும் (பொன்னியின் செல்வன்), அண்மையில் திரைப்படமாக மணிரத்னமும் (PS I & II), சோழ வரலாற்றைப் பற்றி தமிழர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில் உண்மை எது கற்பனை எது என்பதையும், இக்கால நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாஸ்திரி காலத்தின் போதாமைகளை நீக்கியும், தெளிவைக் கொண்டு வரும் வரலாற்று ஆய்வைச் செய்துள்ளார் ஜெயஸ்ரீ ஸாரநாதன்.