-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பத்து மூன்றாம் திருப்பதி...

83. கார்மேகம் போல் அருளும் திருக்காரகம்
பலம் உடையோனே, பயம் அறியானே! குணம் உடையானே, குறை அறியானே! புகழ் உடையானே, இகழ் அறியானே! புலி நடையோனே, புவி அளந்த கால் உடையானே, கருணாகர பெருமானே – என்னையும் காத்து கருணையோடு அருள்வாயே!
கார்ஹ மகரிஷிக்கு பெருமாள் அருளிய தலம். பகவானின் கருணைக்கு இன்னார்0 இனையார் என்ற பேதமில்லை. கார்மேகங்கள் பொழிவது போல அவரது அரூல் அனைவருக்கும் கிட்டும். அதுபோன்ற குணத்துடன் கார்மேகவண்ணனின் கருணை ஒப்பிடப்படுகிறது.
மூலவர்: கருணாகரப் பெருமாள் (நின்ற திருக்கோலம் –தெற்கே திருமுக மண்டலம்)
தாயார்: ரமாமணி நாச்சியார், பத்மாமணி நாச்சியார்
விமானம்: வாமன விமானம்
தீர்த்தம்: அக்ராய தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.15 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலின் (திருஊரகம்) இரண்டாவது தென் பிரகாரத்தில் தனக்கென்று ஒரு சன்னிதி அமைத்துக்கொண்டு அருள்பாலித்து வருகிறார் இப்பெருமாள்.
சேவிப்பதன் பலன்கள்:
தீராத நோயினால் அவதிப்படுபவர்கள், மனக்கோளாறு உள்ளவர்கள், நரம்புத் தளர்ச்சி உடையவர்கள், தோல் வியாதி உள்ளவர்கள் இங்கு வர குணமாகும். 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும் 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களும் வர வேண்டிய தலம் இது; வந்தால் நலம் கிடைக்கும்.
$$$