-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எழுபத்தொன்பதாம் திருப்பதி...

79. எளியவர்களுக்கு அருளும் திருநீரகம்
அன்புக்கும் பணிந்தவனே, பக்திக்குக் கனிந்தவனே! ஆபத்து பாந்தனே, அனாதை ரட்சகனே! ஆதிமூலமென அழைத்ததும் வருபவனே – ஐயனே திருநீரகத்து ஜகதீஸ்வரப் பெருமானே – என்னைக் காத்து ரட்சித்து அருள்வாயே!
நீர்மை என்றால் எளிமை. பிரளய காலத்தில், நீரால் சூழப்பட்ட பூமியில் ஆலிலைக் கண்ணனாகத் துயின்ற பரந்தாமன் பெருமாள். எனவே இவரை நீரகத்தான் என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
மூலவர்: நீர்வண்ணன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: நிலமங்கைவல்லி.
உற்சவர்: ஜெகதீஸ்வரப் பெருமாள்
விமானம்: ஜகதீஸ்வர விமானம்
தீர்த்தம்: அக்ரூர தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.15 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 6.00 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் வடக்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் இந்தப் பெருமாள். இக்கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் இருப்பது சிறப்பு.
சேவிப்பதன் பலன்கள்:
போன ஜென்மத்து பாவங்கள் போகவும், தோஷம் நீங்கவும், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படவும், நோய் நொடிகள் வராமல் இருக்கவும் இங்கு வந்து மாமுனிவர் அக்ரூரா புஷ்கரணியில் நீராடி பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க நலம் உண்டாகும். 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களும், 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$