-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எழுபத்தேழாம் திருப்பதி...

77. நரசிம்மர் நாடிவந்த திருவேளுக்கை
என்னில் இருந்த என்னைப் புரிய வைத்தவனே! கண்ணின் இமைபோலக் காத்தருள்பவனே! சிங்கமுகமாய் பிரகலாதனைக் காத்தவனே! தங்க இடம் தேடி திருவேளுக்கை வந்தவனே – நான் உன்னையே சரணடைந்தேன் காத்தருள்வாயே!
ஹிரண்யகசிபுவை வதம் செய்த நரசிம்மர் அமைதியான இடம் தேடியபோது இங்கு வந்தார். பிருகு மகரிஷி தவம் செய்ததால் அவர்முன் தோன்றினார் என்கிறது தலபுராணம். இவருக்கு ‘வேளுக்கை ஆளரி’ என்பது பிரசித்தமான பெயர்.
மூலவர்: அழகியசிங்கப் பெருமாள் (அமர்ந்த திருக்கோலம் –கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி
விமானம்: கனக விமானம்
தீர்த்தம்: ஹேமசரஸ், கனகசரஸ்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், பேயாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 07.30 மணி வரை
எப்படிச் செல்வது?
இத்தலம் காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் உள்ளது. விஷ்ணுகாஞ்சியில் திருத்தண்காவில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்லது.
சேவிப்பதன் பலன்கள்:
கெட்ட பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்களும், மன நிம்மதி இல்லாதவர்களும், தைரியம் இல்லாதவர்களும் இங்கு வந்து வணங்க நலம் உண்டாகும். 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களும், 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$