-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எழுபத்தொன்றாம் திருப்பதி...

71. மதுகைடபரை அழித்த திருவாறன்விளை
நாமகிரி தாயாருக்கு உரியவனும், நாமங்கள் ஆயிரம் உடையவனும், வேதங்கள் நான்கையும் காத்தவனும், கோபங்கள் கொண்டு மது கைடபரை வதைத்தவனும், தோஷங்கள் தீர்ப்பவனுமான திருவாறன்விளை திருக்குறளப்பனை அணுகி பணிவோமே!
மது கைடபர்களை சம்ஹரித்து, சிருஷ்டி ரகசியத்தை பிரம்மனுக்கு பெருமாள் திரும்ப அளித்த தலம் இது. அர்ஜுன்னால் புனர் நிர்மானம் செய்யப்பட்ட தலம்.
மூலவர்: திருக்குறளப்பன், பார்த்தசாரதி (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: பத்மாசனி நாச்சியார்
விமானம்: வாமன விமானம்
தீர்த்தம்: வேதவியாஸ சரஸ், பம்பா தீர்த்தம்.
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 4.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
கேரள மாநிலம், செங்கன்னூரிலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது (ஆரன்மூலா). பஸ்வசதி உண்டு.
சேவிப்பதன் பலன்கள்:
பாவங்கள், தோஷங்கள் போக்கக்கூடிய தலமாகும். 2, 11, 20, 29ல் பிறந்தவர்கள் வரவேண்டிய தலமாகும்.
$$$