தேசியகவியாகிய பாரதிக்கு ஒளவையார் பாடல்கள் மீது ஓர் ஒப்பற்ற மதிப்பு, மரியாதை இருந்தது என்பதை கீழ்க்கண்ட வரிகள் உணர்த்தும். “தமிழ் நாட்டில் மற்ற செல்வங்களை எல்லாம் இழந்து விட பிரியமா... அல்லது ஒளவையாரின் பாடல்களை இழக்க பிரியமா என ஒருவர் கேட்டால் நான் சொல்வேன். மற்ற செல்வங்களை எல்லாம் இழந்தாலும் மீண்டும் சாம்பாத்தியம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒளவை பிராட்டியாரின் பாடல்களை மட்டும் இழக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன், ஏனென்றால் அவை தமிழ்நாட்டின் தனிப்பெரும் செல்வம்” என்கிறார்.