-ச.சண்முகநாதன்
நாடாளுமன்ற மக்களவையில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பாரம்பரியச் சின்னமான செங்கோல் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கிறுக்குத்தனமாக உளறியதற்கு தகுந்த பதிலடி அளிக்கிறார் திரு. ச.சண்முகநாதன். ‘சீ, சீ நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு’ என்று வெகுண்டு மகாகவி பாரதி பாடியது இத்தகைய ஈனப் பிறவிகளை நினைந்து தானோ?

“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி”
சங்கம் வளர்த்த மதுரை தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், நாள்தோறும் சங்கத்தையும் தமிழ் மரபையும் தூற்றிப் பேசுவதே வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
உலகெல்லாம் மழையை நம்பி வாழும். குடிமக்கள் ஆள்பவரின் செங்கோன்மையை வேண்டி வாழ்வர் என்பது தமிழரின் நம்பிக்கை; இதைச் சொன்னவன் வள்ளுவன் (திருக்குறள்- 522). செங்கோலின் பெருமை பற்றி 10 குறட்பாக்கள் (செங்கோன்மை) எழுதியிருக்கிறான் வள்ளுவன்.
எங்கோ வறண்ட பூமியில் தோன்றிய வறட்டு சித்தாந்தத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் கம்யூனிஸ்டுகளுக்கு தமிழரின் பாரம்பரியம் எப்படித் தெரியும்?
“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு”
‘குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் மாநிலத்து வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து வாழ்வும் நிலைபெறுவதாகும்’ என்பது தெய்வப்புலவர் வள்ளுவன் வாக்கு. இன்றைய ஆட்சியாளர் மட்டும் அல்ல, இனி இந்தியாவில் யார் ஆண்டாலும், இந்த நம்பிக்கை கொண்டே ஆள வேண்டும் என்பதற்கான அடையாளம்தான் செங்கோல்.
இதை உலகுக்குச் சொல்லி தமிழுக்குப் பெருமை தேடாமல், சுவாசித்த காற்றுக்கு துரோகம் இழைக்க மனம் வருகிறதென்றால் இதெல்லாம் என்ன பிழைப்பு!
அரசர்களெல்லாம் பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருந்தார்கள் என்று நா கூசாமல் பிதற்றும் இவர், தன்னை ஆதரிக்கும் கட்சியின் பிரதான தலைவருக்கு எத்தனை துணைவிகள் என்று அதையும் பேசத் தயாரா?
தமிழினத் தந்தை என்று திராவிடர்களால் தூக்கிவைத்துக் கொண்டாடப்படும் ஒரு மனிதன், தன்னைவிட 40 வயது குறைந்த, தன் வளர்ப்பு மகளையே கல்யாணம் செய்துகொண்டது பற்றி இந்த எம்.பி. என்றாவது பேசியிருக்கிறாரா? ஊரெல்லாம் அவருக்குச் சிலை. என்ன சொல்ல வருகிறது திராவிடம் என்று கேள்வி கேட்டிருப்பாரா?
அரசர்களின் அந்தப்புரம் ஒன்றும் திராவிடத் தலைவர்களின் கொல்லைப்புறம் அல்ல, முக்காடு போட்டுகொண்டு போய் அசிங்கம் செய்துவிட்டு வர. செங்கோலும் வெண்குடையும் தமிழ் மண்ணின் பாரம்பரியம்.
சாபமிடும் பொழுது கூட “பார்ப்பர் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தோர் பக்கமே சேர்” என்றே சாபமிட்ட தமிழினம்.
பொற்கொல்லன் சொன்ன பொய்யை நம்பி தீர்ப்பளித்ததால் தான் நீதி பிறழ்ந்து விட்டதை அறிந்த உடனே, தன் செங்கோல் தளர்ந்து விட்டதே என்று தர்மத்துக்கு அஞ்சி அப்பொழுதே உயிர்விட்டான் பாண்டிய மன்னன் என்று தமிழிலக்கியத்தின் மகுடமான ‘சிலப்பதிகாரம்’ செங்கோலின் புகழ் பாடுகிறது.
“தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
‘பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்!’ என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே"
(சிலப்பதிகாரம்- மதுரை காண்டம்- வழக்குரை காதை: 74-79)
இதுதான் செங்கோலின் மகிமை. செங்கோல் தளர்ந்ததால் ‘கெடுக என் ஆயுள்’ என்று உயிர் துறந்தான் தமிழ் வேந்தன்.
தமிழ்க்காற்றை சுவாசித்ததற்காக கொஞ்சம் விசுவாசம் இருந்திருந்தால், இப்படி செங்கோல் தாங்கிய அரசர்கள் மீது பழிச்சொல் சொல்ல மனம் வருமா?
தமிழ் மரபு, தமிழ் மொழி, தமிழினம் – இவற்றின் மீது கம்யூனிஸ்டுகளுக்கு என்ன மரியாதை இருந்துவிடப் போகிறது?
செங்கோல் என்பது மரபு. இன்று மோடி, நாளை யாரோ. ஆனால் யாராக இருந்தாலும் அந்த மரபுப்படி நீதி நிலை நழுவாமல் இருக்கட்டும் என்று தமிழ் மரபை உச்சத்தில் வைத்தவர் பிரதமர் மோடி. செங்கோல் என்றால் பிரச்னை. ஒருவேளை ‘நடனமாடும் கோல்’ வைத்திருந்தால் இந்த எம்.பி. ஆதரவு கொடுத்திருப்பார் என்று தெரிகிறது.
செங்கோல் பற்றி ஒரு அதிகாரமே எழுதிய திருவள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்பாரா இந்த தரம் கெட்ட எம்.பி.?
“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு”
‘குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் மாநிலத்து வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து வாழ்வும் நிலைபெறுவதாகும்’ என்று (திருக்குறள்- 544) பாடிய வள்ளுவர் மீது என்ன மரியாதையை வைத்திருக்கிறது கேடு கெட்ட திராவிட, கம்யூனிஸட் கூட்டம்?
தமிழ் மரபைப் போற்றியும் மரியாதை செய்தும், நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியவர் ஓர் உத்தமன். அதை கானிடத் திரிவேதார் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் ஒப்ப ஆயிற்று இந்த தமிழ் விரோத திராவிட/கம்யூனிச விமரிசனம்.
$$$