திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -54

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பத்து நான்காம் திருப்பதி...

54. இந்திரனின் பிரம்மஹத்தி போக்கிய திருப்புளிங்குடி  

ஆயிரம் நாமங்கள் கொண்டாய்…
ஆதிசேஷனில் பள்ளி கொண்டாய்…
பாதிமனிதன் மீதி சிங்க உருவம் கொண்டாய்…
நாமகிரியை நல்மார்பில் கொண்டாய்…
திருமகளோடு திருஉலா வந்தாய்…
திருப்புளிங்குடி பெருமானே!
பூமாதேவி போல நானும் வருத்தமுற்றேன்,
எப்போது அருள்காட்சி தருவாயோ!

நவ திருப்பதிகளுள் ஒன்று; புதன் தலம். இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் போக்கிய தலம்.

மூலவர்: பூமிபாலகப் பெருமாள்  (புஜங்க சயனம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார்
உற்சவர்: காய்சினவேந்தன், புளிங்குடிவல்லி
விமானம்: வேதசார விமானம்
தீர்த்தம்: வருண தீர்த்தம், நிருதி தீர்த்தம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 9.00 மணி முதல் 01.00 மணி வரை
மாலை 02.00 மணி முதல் 05.30 மணி வரை

எப்படிச் செல்வது?

இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வடகிழக்காக தாமிரபரணி ஆற்றின் வடகரைப் பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. வரகுணமங்கையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.

சேவிப்பதன் பலன்கள்:

புதன் பரிகாரத் தலம். முன்ஜென்ம சாபம் நீங்கவும், தடைப்பட்ட சுபகாரியம் நடக்கவும் வந்து வணங்க வேண்டிய தலமும் கூட. 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment