திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -53

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பத்து மூன்றாம் திருப்பதி...

53. கள்ளனாக பெருமாள் வந்த திருவைகுண்டம்  

குலசேகரப்படியாய்க் கிடந்தார்…
குழிதோண்டும் இரும்பால் அடித்தார்…
கூடவே எழுந்து வா என்றார்…
பாடவே மாட்டேன் என்றார்…
பக்தனுக்காக எல்லாமே ஏற்றுக்கொண்ட - நீ
திருவைகுண்டம் வந்து கள்வனுக்காய் சாட்சியும் சொன்னாயே!

நவ திருப்பதிகளுள் சூரியனுக்குரிய முதலாவது தலம். ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடலாம். காலதூஷகன் என்ற திருடனுக்காக மன்னனிடம் கள்ளனாகச் சென்று பெருமாளே வாதிட்டதால் கள்ளபிரான் என்று மூலவர் பெயர் பெற்றார்.  சித்திரை, ஐப்பசி மாதங்களில் 6 ஆம் நாளன்று சூரிய ஒளி வைகுண்டநாதர் மீது விழும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.  இக்கோயிலில் உள்ள அழகிய சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை.

மூலவர்: கள்ளபிரான், ஸ்ரீவைகுண்டநாதன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: வைகுந்தவல்லி, பூதேவி
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம்: பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை நடை திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 08.00 மணி வரை

எப்படிச் செல்வது?

திருநெல்வேலி  – திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் இருக்கிறது.  ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.

சேவிப்பதன் பலன்கள்:

தவறு செய்து திருந்த நினைப்பவர்கள்,  நீதிபதியின் தீர்ப்புக்காகக் காத்திருப்பவர்கள், இங்கு வந்து பெருமாளைப் பிராத்தனை செய்ய, மிகப் பெரிய மாற்றத்தை அடையலாம்.  8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வரவேண்டிய தலம் இது.

$$$

Leave a comment