திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -49

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்தொன்பதாம் திருப்பதி...

49. நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூர்   

நீர் கொண்ட மேக வண்ணனை,
நிலா இல்லா வானத்:து நிறத்தவனை,
கரியவனை, கருத்தவனை, கண்ணபிரானை,
கள்வனைத் தேடியவரின் மனம் கொள்ளை கொண்டவனை,
ஆழ்வார்க்கு அருளியவனை, ஆதிநாதப் பெருமானை,
திருமகளுக்குக் கனிந்தவனை, திருக்குருகூர் அப்பனை – நான்
திருவடி பணிய தேடி வந்தேன் திருக்குருகூருக்கே!
நம்மாழ்வார்

நம்மாழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலில் உள்ள ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரத்தில் தான் உடல் செயலற்ர நிலையில் நம்மாழ்வார் (பூர்வ நாமம்: சடகோபன்) வாசம் செய்தார்; இறையருளால் தெய்வீக்க் கவியானார். இத்தலத்தில் பெருமாள் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நம்மாழ்வாரை இஅங்கு பதுரகவியாழ்வார் பாடி மகிழ்ந்து, தனது குருவாக ஏற்றார். எனவே நவ திருப்பதிகளில் இத்தலம் குருத்தலாமக வணங்கப்படுகிறது.

மூலவர்: ஸ்ரீ ஆதிநாதப் பெருமாள்  (அமர்ந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி
உற்சவர்: பொலிந்துநின்றபிரான்
விமானம்: கோவிந்த விமானம்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், தாமிரபரணி ஆறு
தல விருட்சம்: புளியமரம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார். ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரும் பாடியுள்ளனர்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?

ஆழ்வார் திருநகரி என்னும் ஊரே திருக்குருகூர் ஆகும். இது திருநெல்வேலியிருந்து தென்கிழக்காக  20 கி.மீ. தொலைவில் உள்ளது.    

சேவிப்பதன் பலன்கள்:

ஊனமுற்றவர்கள், கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் வாழ்வு வளம் பெற வந்து வணங்க வேண்டிய தலம் ஆகும். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment