-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்தெட்டாம் திருப்பதி...

48. ஆண்டாளின் அவதார பூமி திருவில்லிப்புத்தூர்
மல்லாண்டவனே மணிவண்ணனே, சொல்லாண்ட ஆண்டாளை மனையாளாய் மணந்தவனே! திருவில்லிப்புத்தூரில் கிடந்தவனே! உற்றானே, உறுதுணையே, உடையவனுக்கு உரியவனே! பற்றானேன் உன் திருப்பாதம் பணிந்தேனே!

நாராயணனையே மணாளனாக அடைந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் இது. இக்கோயிலின் பட்டரா இருந்தவர் தான் பெரியாழ்வார். அவரது வளர்ப்பு மகளாக வந்துதித்த ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் தமிழ் இலக்கியத்தின் இனிய பக்கங்கள். இக்கோயில்ன் கோபுரம் தான் தமிழக அரசின் இலச்சினையில் உள்ள கோபுரமாகும். ஆண்டாளும் ரங்க மன்னாரும் மணக் கொல்லத்தில் அருல் பாலிக்கின்றனர்.
மூலவர்: வடபத்ரசாயி (புஜங்க சயன திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: ஆண்டாள்
உற்சவர்: ரங்க மன்னார்
விமானம்: சம்ஸன விமானம்
தீர்த்தம்: திருமுக்குளம்
மங்களா சாசனம்: பெரியாழ்வார், ஆண்டாள்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை
எப்படிச் செல்வது?
விருதுநகருக்கு தென்மேற்காக 45 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
பக்தியோடு இறைவனை நினைத்துப் பிரார்த்தனை செய்தால் எல்லா குறையும் நீங்கி மனநிம்மதி கிடைக்கக்கூடிய தலமாகும். 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$