தென்காசி அருகிலுள்ள கரிவலம் வந்த நல்லூர் ‘திருக்கருவை’ என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உறையும் ஈசனைப் போற்றி வரதுங்கராம பாண்டிய மன்னர் (தென்காசிப் பாண்டிய மன்னர்களுள் ஒருவர்; கருவையை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்; காலம்: பொ.யு. 1588- 1612) இயற்றிய மூன்று அந்தாதி நூல்களும் ‘திருக்கருவை அந்தாதிகள்’ என்று வழங்கப்படுகின்றன. பிற்கால சிற்றிலக்கியங்களில் மொழிவளமும் ஆன்மிக நலமும் கொண்ட இந்த அந்தாதி நூல்களை இயற்றியவர் வரதுங்கராம பாண்டியரின் சகோதர முறையினரான அதிவீரராம பாண்டியர் (இவர் நைடதம், வெற்றிவேற்கை நூல்களை எழுதியவர்; தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்; காலம்: 1564- 1610) என்று தமிழ்ப் பாடநூல்களில் தொடர்ந்து பிழையாக கற்பிக்கப்படுகிறது. இந்தப் பிழையை நேர்செய்ய வேண்டி, இதே ஊரைச் சேர்ந்தவரும் இலக்கிய ஆய்வாளருமான திரு. பா.ஸ்ரீராமகிருஷ்ணன் (சிறுவாபுரிச் சிறுவன்) எழுதியுள்ல இனிய ஆய்வுக் கட்டுரை இது…
Day: July 3, 2024
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -47
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்தேழாம் திருப்பதி...