திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -40

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பதாம் திருப்பதி...

40.  விஜயனின் தாகம் தீர்த்த திருப்பார்த்தன்பள்ளி

பார்த்தன் கேட்க கீதை உரைத்த சாரதியே!
கூத்தனின் சாபம் போக்கிய சாரதியே!
பாண்டவ தூதனாய் அமர்ந்த சாரதியே - உன்னை
வேண்டியபடி வந்தேன் பார்த்தன்பள்ளி -  நீ
வருணனைக் காத்ததுபோலக் காத்தருள்வாயே!

ஷேத்திராடனத்தின்போது, அர்ஜுனனுக்கு தாகம் தீர்க்க பெருமாள் வாள் தந்த தலம். அந்த வாளால் பூமியில் அர்ஜுனன் கீற, உருவான தீர்த்தம் உள்ளது. அர்ஜுனனுக்கும் அகத்தியருக்கும் பார்த்தசாரதியாக பெருமாள் தரிசனம் தந்த தலம் இது.

மூலவர்: தாமரையாள் கேள்வன் (நின்ற திருக்கோலம் – மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: தாமரை நாயகி
உற்சவர்: பார்த்தசாரதி
விமானம்: நாராயண விமானம்
தீர்த்தம்: கட்க புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை

எப்படிச் செல்வது?

சீர்காழியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலும், திருவெண்காட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

சூழ்ச்சி, வஞ்சகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பெருமாளைத் தரிசிக்க நல்ல தீர்ப்பைப் பெறுவார்கள். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து தரிசிக்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment