-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்து நான்காம் திருப்பதி...

34. உபமன்யுவுக்கு பால் ஈந்த திருவண்புருஷோத்தமம்
ஐயம் காக்க கீதை தந்தாய், ஐவரைக் காக்க சாரதி ஆனாய், ஐஸ்வர்யம் தந்து குபேரனைக் காத்தாய், ஐயனே, திருநாங்கூர் புருஷோத்தமனே, அடியேனையும் அஞ்ஞானம் போக்கிக் காப்பாயே!
திருநாங்கூரில் உள்ள நான்காவது திவ்யதேசம். வியாக்ரபாத முனிவரின் குழதைஉபமன்யுவுக்கு திருப்பாற்கடலையே பாலாக தாயார் கொடுத்த தலம். அயோத்திராமனே இங்கு தரிசனம் அளிக்கிறார்.
மூலவர்: புருஷோத்தமன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: புருஷோத்தம நாயகி
விமானம்: சஞ்சீவவிக்ரஹ விமானம்
தீர்த்தம்: திருப்பாற்கடல் தீர்த்தம்
தல விருட்சம்: பலா, வாழை மரம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்; மணவாள மாமுனிகளும் பாடியுள்ளார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை
எப்படிச் செல்வது?
திருநாங்கூர் சீர்காழியிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
வறுமையைப் போக்கவும், கல்வியில் சிறக்கவும் வந்து வணங்க வேண்டிய தலம் ஆகும். 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் இங்கு வர நலம் உண்டாகும்.
$$$