ஒவ்வொரு பாடலுக்கும், பதவுரை, விளக்கவுரை ஆகியவற்றுடன், ஆழ்வார்கள் வாக்கு என்ற ஒப்பீடுப் பகுதியையும் இணைத்து, முப்பரிமாணத்தில் நூலைத் தொகுத்திருப்பது மிகவும் சிறப்பு. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நூலாசிரியரின் தேர்ச்சி ஒப்பீடுகளில் வெளிப்படுகிறது. அந்த வகையில், ‘தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர்’ என்ற இந்நூல், ஆழ்வார்களின் பாசுரங்களின் துணையுடன் மிளிர்கிறது.
Day: June 16, 2024
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -30
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பதாம் திருப்பதி...