திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -22

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இருபத்திரண்டாம் திருப்பதி...

22.  சந்திரன் வழிபட்ட திருஇந்தளுர்

அழகன் சந்திரன் தோஷம் நீக்கி
அரக்கன் மறைந்த வேதம் காத்து
இரக்கமில்லா மது கைடபரை வதைத்து–
பரிமளரங்கநாதனாய் உறக்கம் கொள்ள
கிடந்த ஊர் திருஇந்தளுரே!

அம்பரீச மன்னனின் ஏகாதசி விரதம் காக்க, துர்வாசர் ஏவிய பூதத்தை அழித்தவர்; சந்திரன் சாப விமோசனம் பெற வழிபட்ட பெருமாள் இவர். ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் கூடிய பெரிய கோயில்.

மூலவர்: பரிமளரங்கநாதன் (வீர சயனம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: பரிமளரங்கநாயகி
விமானம்: வேத அமோத விமானம்
தீர்த்தம்: இந்து புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை

எப்படிச் செல்வது?

மயிலாடுதுறை (மாயவரம்) நகரின் மையத்தில் இத்திருத்தலம் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

சாபம் தீர்க்கும் தலம் ஆகும். 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.

$$$

One thought on “திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -22

Leave a reply to Ramadevi Rajesh Cancel reply