வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பதினேழாம் திருப்பதி...
Day: June 3, 2024
கோமதி சதரத்ன மாலை- நூல் அறிமுகம்
சங்கரன்கோவில் திருத்தலத்தில் உறையும் தேவி கோமதி அம்மன். சைவ - வைணவ ஒற்றுமைக்குப் பாலமாகத் திகழும் இத்தலத்து அம்மையை தமது செந்தமிழால் பாடிப் பரவுகிறார், சென்ற நூற்றாண்டின் மையத்தில் சைவத்தமிழ் வளர்த்த சைவ சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளையவர்கள். கோமதி அம்மனின் பெருமைகளை விவரிக்கும் இந்த நூறு பாடல்களும் ரத்தினம் போல மிளிர்கின்றன.