தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்: நூல் அறிமுகம்

-திருநின்றவூர் ரவிகுமார்

இந்நூலில் 15 அத்தியாயங்கள் இதில் உள்ளன. முதல் அத்தியாயம் முருக வழிபாடு கௌமார சமயமாக - முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது - தனித்து விளங்கியதையும் பின்னர் பகவத் பாதரால் அது இன்றைய ஹிந்து மதத்தின் ஒரு அங்கமாக ஆனதையும் சொல்கிறது. மற்ற அத்தியாயங்கள் 14 முருக பக்தர்களைப் பற்றியும் அவர்கள் இயற்றிய நூல்களையும் கூறுகின்றன.

பெயரே  நூல் எதைப்பற்றி என்று கூறிவிடுகிறது. 15 அத்தியாயங்கள் இதில் உள்ளன. முதல் அத்தியாயம் முருக வழிபாடு கௌமார சமயமாக – முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது – தனித்து விளங்கியதையும் பின்னர் பகவத் பாதரால் அது இன்றைய ஹிந்து மதத்தின் ஒரு அங்கமாக ஆனதையும் சொல்கிறது.

மற்ற அத்தியாயங்கள் 14 முருக பக்தர்களைப் பற்றியும் அவர்கள் இயற்றிய நூல்களையும் கூறுகின்றன. சங்க காலப் புலவரான நக்கீரர் தொடங்கி அண்மையில் (2002) சித்தி அடைந்த சாந்தானந்த சுவாமிகள் வரை இதில் அடக்கம்.

நக்கீரர், ஔவையார், போகர்; அகத்தியர்; பாம்பாட்டி சித்தர்; சிவவாக்கியர் என்று சித்தர் மரபில் வந்தவர்கள், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், பகழிக் கூத்தர், குமரகுருபர சுவாமிகள், ‘வண்ணச்சரபம்’ தண்டபாணி சுவாமிகள், வள்ளலார், பாம்பன் சுவாமிகள், ‘தணிகைமணி’  செங்கல்வராய பிள்ளை, கந்த சஷ்டி கவசம் இயற்றிய தேவராய சுவாமிகள், வாரியார் சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் பற்றிய கட்டுரைகள் உள்ளன.

இதில் தணிகை மணி பற்றிய கட்டுரையில், சிவத் தொண்டர்கள் வரலாறு தொகுப்பான தெய்வ சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தைப் போல முருக பக்தர்களின் வரலாற்றைத் தொகுக்க ஆசைப்பட்டு, தேனூர் வரகவி வே.செ.சொக்கலிங்கனாரைக் கொண்டு ‘சேய் தொண்டர் புராணம்’ இயற்றியது பற்றிய குறிப்பு சுவாரஸ்யமாக உள்ளது.

நூல் விவரம்:

தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்
ஆசிரியர்: வ.மு.முரளி
48பக்கங்கள்; விலை: ரூ. 50-

வெளியீடு: 
திருக்கோயில் திருத்தொண்டர் அறக்கட்டளை, 
திருப்பூர்.
தொடர்புக்கு:  93630 12288

$$$

Leave a comment