-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #4

4. 13-ம் ஜோக்கர் தானா?
ராமர் சிலையின் நெற்றியில் போய்
சூரிய ஒளியைப் பாய்ச்சுகிறார்கள்
வெட்கம், வெட்கம்!
ஆதித்யா ஆர்பிட்டரை அண்டவெளியில்
அனுப்பிய பின்னர் தானே ப்ரோ?
*
புதைந்து கிடந்த பாம்பைத் தோண்டி எடுத்து
பாரம்பரியப் பெயரைச் சூட்டிக் கொள்கிறார்கள்
அவமானம், அவமானம்!
அறுபது ஆண்டுகள் கட்டை வண்டியாக இருந்த ரயிலை
புல்லட் வேகத்துக்கு மாற்றிய பின்னர்தானே பாய்?
*
பிரதமர் பூசாரி போல
கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார்
கேவலம், கேவலம்!
ஓரமாக ஒதுங்கி நில்லு உ.பி.யே!
உன் தலைவன்களும் கூட்டணி அல்லக்கைகளும்
அங்கப் பிரதட்சணம் செய்து கொண்டிருக்கிறான்கள்.
*
பாலைக் கொட்டறானுங்க…
கோமூத்திரத்தைக் குடிக்கறானுங்க..
முட்டாள்கள்… முட்டாள்கள்!
உலகிலேயே அதிக செயற்கைக்கோள்களை
அதி துல்லியமாக
ஆகக் குறைந்த செலவில்
ஒட்டுமொத்த உலகுக்கும் ஏவிக் கொடுப்பவர்களும்
நாங்கள்தானே சொங்கிகளே!
குடிச்சிட்டு ‘டீல்’ பேச வந்தவனோட…
சைக்கிளில் ராக்கெட்டைச் சுமந்து செல்ல வைத்தவனோட..
அடிவருடிகளெல்லாம்
ஓரமாகப் போய் விளையாடுங்கடே!
*
உலகப் பேரிடருக்கு
உன்னத்த் தடுப்பூசியை உருவாக்கித் தந்திருக்கிறோம்.
கற்ற வித்தை அனைத்தையும் காட்டியும்
வெளிநாட்டிலிருந்து வாங்கி
தரகு பார்க்க வழியில்லாமல் போனதே என்று கதறினாயே,
கேட்க எவ்வளவு ஆனந்தமாக இருந்தது தெரியுமா?
*
நேருவுக்குப் பதில் மோதி பிரமராகியிருந்தால்
நாட்டு விஞ்ஞானமே இன்றி முடங்கிப் போயிருக்கும்…
வெள்ளைக்காரன் போய்விட்டால்
ஒரு குண்டூசி கூடத் தயாரிக்க முடியாது…
அவனா நீயி?
கலர் கலரா டிரெஸ் போட்ருக்கான்..
முன்பக்கம் சட்டை பித்தான் எல்லாம் நல்லா இருந்ததுன்னு
நம்பி பேசிட்டிருந்திட்டேனே…
தெனம் தெனம்
ஒரு லூசுகிட்ட மாட்ட வேண்டியிருக்கே…
13-ம் ஜோக்கரா இருந்தா எப்படியப்பா விளையாடறது?
$$$