நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்குமாம். இவற்றைத் தரும்படி தத்தம் குல தெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லாத் தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்று மூன்றிலும் தெய்வ ஒளி காண வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும். ..