உருவகங்களின் ஊர்வலம் -2

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில்  சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #2

2. கையைக் கொண்டே கண்னைக் குத்தும் தந்திரம்!

காந்தி முன்னெடுத்த ராம ராஜ்ஜியக் கனவுகள்
ஓரங்கட்டப்பட்டது,
காந்தியின் சீடன் நேருவினாலேயே.

நேருவிய காங்கிரஸ் அழிக்கப்பட்டது
நேரு குடும்பத்துக் குலக் கொழுந்துகளாலேயே.

பட்டியல் ஜாதி அரசியலின் வீழ்ச்சி
பட்டியல் ஜாதித் தலைமைகளாலேயே.

ஈழத் தமிழ் தேசியம் அழிக்கப்பட்டது,
பிரபாகரனின் வெறியாட்டத்தினாலேயே.

வர்க்கப் புரட்சியின் நியாயங்களை ஒழித்தது,
பொலிட்பீரோ வன்முறைகளே.

ஈவேராயிஸத்தை அழித்தது,
அவனுடைய திராவிடச் சீடன்களே.

இஸ்லாமிய நியாயங்களை ஒழித்தது,
வஹாபிஸ- பின்லேடனிய வன்முறைச் செயல்களே.

பெண்ணியம் பேசியவர்களே
பெண் சுரண்டலைப் பெருக்கியிருக்கிறார்கள்.

இந்துத்துவர் முன்னெடுக்கும்
இந்து ராஷ்டிரக் கனவை
இதுபோல் ஆகாமல் காப்பது எப்படி..?

அடுத்தவர் தெய்வத்தைப் பழிக்காத அனைவரையும்
அரவணைத்துச் செல்லும் கொள்கையை
அழியாமல் காப்பது எப்படி?

எம்மதமும் சம்மதம் என்று சொல்லி
தன் மதம் பரப்புபவரைத் தடுப்பது எப்படி?


*

எங்கெல்லாம்
ஒருங்கிணைந்த செயல்பாடு,
ஒற்றைத் தலைமை,
அதிகாரக் குவிப்பு,
அடிமைத்தன விசுவாசம் உருவாகிறதோ,
அங்கெல்லாம்
அவை தாமாகவே அழிவைக் கொண்டுவந்திருக்கின்றன.
அல்லது
எளிதில் மடைமாற்றப்பட்டிருக்கின்றன.

ஒரு நாட்டை மதம் மாற்றவேண்டுமா?
மன்னரை மதம் மாற்று.

நம் புத்தன் போதித்த வழிதான்.

நோ ஃபயர் ஸோனில் அனைவரையும்
ஒன்றுகூடவைத்தால்
ஒற்றைக் கொத்துக் குண்டு போதும்.

பெளத்த வேட கிறிஸ்தவன் காட்டிய வழி.

தேனீக் கூட்டத்தை வெல்ல வேண்டுமா?
ராணித் தேனியை வளைத்துப் போடு.

இந்துக்களில் இருந்தே
ஒற்றைத் தலைமை காந்தியை உருவாக்கினார்கள்.

நேரு குடும்பத்துக்குள்ளே
ஒற்றர் தலைவி சோனியாவைச் செருகினார்கள்.

தமிழர்களில் இருந்தே
சார்லஸ் அந்தோணியின் தந்தையாக
பிரபாகரனை உருவாக்கினார்கள்.

பாட்டாளிகளில் இருந்தே பொலிட்பீரோ உருவானது.

இஸ்லாமியரிடமிருந்தே தீவிரவாதிகள் உருவானார்கள்.

கையைக் கொண்டே
கண்ணைக் குத்தவைக்கும் தந்திரம்.


*

ஒற்றைப்படைச் சித்தாந்தமே தவறு.
அதிலும் ஒற்றைத் தலைமை என்றால் அதனினும் தவறு.

ஏகாதிபத்தியத்துக்கு எல்லாமே சாத்தியம்.
சர்வாதிகாரம் செய்வதெல்லாம் சதிகளே!

நம் தலைவர்களைத் தவிர
மற்ற கட்சித் தலைவர்களை இயக்குவதெல்லாம்
கார்ப்பரேட் மாஃபியாக் கொடுங்கரங்களே
என்று நம்பிக்கொண்டால்
நாமே ராஜா… நாமே மந்திரி…
நாற்பதும் நமதே… நாடும் நமதே…
*

தெய்வமேயானாலும்
ஒரே சிவன்,
ஒரே விஷ்ணு,
ஒரே அம்மன்,
என்றால் ஒரே முடிவு: ஒரே அழிவுதான்.

காக்கும் தெய்வம்,
அழிக்கும் தெய்வம்,
ஆக்கும் தெய்வம் என
அதிகாரமும் பொறுப்பும் பகிரப்பட்டாலே
அகிலத்துக்கு நல்லது.

தர்மத்தின் படி வழிகாட்ட ராஜ குரு,
தர்மத்தைக் காக்க ராஜாதி ராஜன்,
தர்மத்தின்படி செல்வம் பெருக்கி
தர்மத்தையே போஷிக்கும் பெருவணிகன்,
தர்மத்தின்படி நடந்துகொள்ளும்
தொழில் முனைவர் குலம், சேவகர்குலம்,

ஒன்றுபட்டபோது நமக்கு வாழ்வு இருந்தது
ஆனால்,

மன்னனே கோவிலை நிர்வகிப்பான்,
மன்னனே ராஜ்ஜியம் காப்பான்,
மன்னனே வணிகம் கட்டுப்படுத்துவான்,
(அதிகாரவர்க்கத்தில் ஊடுருவிய
மன்னனின் ஆட்களே கட்டுப்படுத்துவார்கள்)
மன்னனே தொழில் விதி வகுப்பான்,
என ஒற்றைப்படையானால்,

நல்ல மன்னன் இருக்கும்வரை நாடு பிழைக்கும்.
தீய மன்னனின் ’கை’ ஓங்கினால் நாடே அழியும்.

வேதனையான வேடிக்கை என்னெவென்றால்,
வர்ணாஸ்ரம குலம் ஒற்றைப்படை நோக்கி நகர்கிறது.
ஒற்றைப்படைக் கும்பல் வர்ணாஸ்ரம் நோக்கி வருகிறது.

மத மாற்ற அதர்மத்தின்படி வழிகாட்ட பாதிரி,
மத மாற்ற அதர்மத்தைக் காக்க வல்லரசு,
மத மாற்ற அதர்மத்தின்படி செல்வம் பெருக்கி
மத மாற்ற அதர்மத்தையே போஷிக்கும் கார்ப்பரேட் கும்பல்,
மத மாற்ற அதர்மத்தின்படி நடந்துகொள்ளும்
தொழில் முனைவர் குலம், அறிவுஜீவிக் கையாட்கள்,
அவரவர் எல்லைக்குள் அந்நியர்கள் இயங்குகிறார்கள்.

ஆதி வழிகாட்டிய வர்ணாஸ்ரமத்தைப் பழித்தபடியே
வர்ணாஸ்ரம தர்மத்தின்படி நடந்து
ஒற்றைப்படை அரக்கன் வெல்லப் போகிறானா?

ஒற்றைப்படை வழியில் நடந்து
வர்ணாஸ்ரம தேவர் குலம் வெல்லப்போகிறதா?

வழியை மாற்றிக்கொண்ட ஒற்றைப்படைக் கும்பல்
அதர்ம இலக்கையும் மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

வழியை மாற்றிக்கொண்ட வர்ணாஸ்ரம தேசம்
தர்ம இலக்கைக் கைவிடாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

மத மாற்றத்தைத் தடு என்று
மத மாற்ற தேச அரசன் சொல்ல மாட்டான்.
மத மாற்றத்தை நிறுத்து என்று
மத மாற்றாத தேச அரசன் ஏன் சொல்வதில்லை?

கிறிஸ்தவம் மத மாற்றத்தை ஆதரிக்கிறதா?
கிறிஸ்தவ தேசத்துக்குள் மதம் மாற்றிக்கொள்.
இந்து மதம் மத மாற்றத்தை ஆதரிக்கவில்லை,
இந்து தேசத்தில் மதம் மாற்றாதே.
இஸ்ளாமிய தேசத்தில்
கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு இடமில்லை.
கிறிஸ்தவ தேசத்தில்
இஸ்லாமிய மத மாற்றத்துக்கு இடமில்லை.
இந்தியாவில் மட்டும்
இரண்டு மத மாற்றிகளுக்கு என்ன வேலை?

கம்யூனிஸ நாட்டில்
கிறிஸ்தவருக்கும் இடமில்லை;
முஸ்லிமுக்கும் இடமில்லை.
இங்குமட்டும் எதற்கு
இருவருக்கும் ஷூ நக்குகிறாய் கம்யூனிஸ்ட் நாயே!

கசாப்புக் கடைக்காரனுக்கு பயந்து ஓநாயுடனும்
ஓநாய்க்குப் பயந்து கசாப்புக் கடைக்காரனுடனும்
நட்பு பாராட்டும் ராஜ தந்திர ஆடுகளை
இந்த உலகில் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா?

சிங்கங்கள் கூட்டாக வேட்டையாடும்.
ஓநாய்கள் மந்தையாக வந்து தாக்கும்.
ஆநிரைகள் பிரிந்து மேய்ந்தாலே
அவற்றுக்கு நல்லதா?

ஓடித் தப்பிப்பது ஒன்றே வழியா?
உயிரைக் காப்பது மட்டுமே ஒரே இலக்கா?

புலியையும் ஓநாயையும் கழுகையும் ஒன்றுசேர விட்டுவிட்டால்
ஆநிரைகளுக்கு எத்தனைதான் ஒற்றுமை வந்தாலும்
அழிவு தவிர்க்கவே முடியாததுதானே?

அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் இருந்தாலே
அனைவருக்கும் நல்லது.
எதிரிகளை ஒன்றுகூட விடாமல் தடுப்பதே
எளியவர்களுக்கு நல்லது.
வெற்றிக்கான தாரக மந்திரம் ஒன்றே!

நமக்குள் ஒற்றுமை…
எதிரிக்குள் பிளவு.

$$$

Leave a comment