பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

சந்தனம் தன்னைத் தேய்த்து நறுமணம் வழங்குவது போன்றது சகோதரி நிவேதிதையின் தியாக வாழ்க்கை. பெயருக்கு ஏற்றபடியே, பாரதத்தின் எழுச்சிக்காக அவர் நிவேதனமானார். இன்று நாடு நாடுவதும் நிவேதிதை போன்ற இளம் பெண் சிங்கங்களையே!