சொக்கநாதரின் தமிழ் விளையாடல்

தமிழ்ப் புலவர்கள் என்றால் சண்டையும் சச்சரவும் சகஜமான விஷயமாயிற்றே! அதுபோல் ஒருமுறை சங்கப் புலவர்கள் இடையே யாருக்குப் புலமை அதிகம்? என்று சண்டை மூண்டபோது, அதனைக் களைந்து, சிறந்த புலவர்கள் யார்? என்பதை நிலைநாட்டி, அவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்திய திருவிளையாடலும் சுவையானதே.