-ச.சண்முகநாதன்

கர்நாடக சங்கீத வித்வான் TM கிருஷ்ணா, பெருமாள் முருகன் எழுதிய கவிதை ஒன்றை கர்நாடக சங்கீத முறையில் பாடி, வெளியிட்டு இருக்கிறார். அது அவர்களிடையே பிரபலமாகி இருக்கிறது.
ஈவேரா காலமெல்லாம் எதை கேவலமாகப் பேசினாரா, அவருடைய அடிவருடிகள் எதை இன்னும் நிந்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அதை வைத்தே அவரைப் பாடுவதெல்லாம் ஈவேராவை இழிவு படுத்துவது மட்டும் அல்ல, அது இசையையும் அவமானப்படுத்துவது என்பதே என் எண்ணம்.
இதைப் பிரபலப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். விளம்பரமாக இல்லாவிட்டாலும் எதிர்ப்பாகவாவது எழுத வேண்டும் என்ற உந்துதலால் எழுதுகிறேன்.
சங்கீதம் நதி போல எல்லோருக்கும் சொந்தம் என்றாலும், நதி நீரை யார் வேண்டுமாலும் பருகலாம் என்றாலும், ஒரு சாராய ஆலைக்காக நதியில் இருந்து தண்ணீர் எடுத்தால் கோபம் வரும் தானே? ஒரு சாயத்தொழிற்சாலை முதலாளி அந்த நதியில் சாக்கடை நீரைக் கலக்கும் பொழுது வரும் கோபம் போன்றதே நம் கோபம்.
பிலஹரி ராகத்தில் பாடியிருக்கிறார் சங்கீத உபாசகர். பாவம் பிலஹரி. தியாகராஜரின் “தொரகுனா இதுவன்டி சேவா”, பெரியசாமி தூரனின் “அப்பா உன்னை மறவேனே” என்ற வரிகளைத் தாங்கி வந்த ராகம் பிலஹரி. இப்பொழுது ஈவேரா புகழ் பாடும் அழுக்கு வரிகளைச் சுமக்கிறது.
ஈவேராவை பிலஹரியில் பாடுவது ஹிட்லருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுப்பது போன்றது. இந்தப் பாடலை இனி வரும் காலங்களில் இவர் கச்சேரியில் பாடாமல் இருப்பாரா? பார்ப்போம், என்ன நடக்கிறது என்று.
தியாகராஜ ஸ்வாமிகளின் தர்ம பத்தினி உயிர் பிரிந்தவுடன் அந்த நிலைமையில் தியாகராஜ ஸ்வாமிகள் பாடிய “தொலி ஜென்மமுன ஜேயு” கீர்த்தனையை பிலஹரியில் பாடினார்.
இங்கே பெருமாள் முருகனின் வரிகள் ரொம்ப சம்பிரதாயமான வரிகளாக இருக்கிறது. ஏதாவது நல்லது இருந்தால் தானே எழுதுவதற்கு. எல்லாம் fictious. “பாளையம்கோட்டை சிறையிலே பாம்புகள் பல்லிகள் நடுவே” போன்ற வரிகள்.
பொய்யும் புரட்டும் திராவிடத்தின் ஆணிவேர்.
“சிந்திக்கச் சொன்னவர் பெரியார்... தந்தை பெரியார்... தந்தை பெரியார்... சொந்த புத்தியைக் கொண்டே எதையும் சிந்திக்கச் சொன்னவர் பெரியார்...’’
சொந்தப் புத்தி உள்ள எவனாவது தான் வளர்த்த குழந்தையை – அதுவும் சொத்தைப் பாதுகாக்க – கல்யாணம் செய்து கொள்வானா? சொந்தப் புத்தி உள்ளவன் எவனாவது அடுத்தவன் அணியும் பூணூலை கிலோக் கணக்கில் அறுக்கச்சொல்வானா?
எந்த சொந்தப் புத்தி உள்ள தொண்டனாவது அந்தக் கடமையை தலைமேல் வைத்து கத்தியோடு பூணூல் வேட்டை நடத்த பிராமணர்களை விரட்டிக்கொண்டு போவானா? சிந்திக்கக்கூட வேண்டாம், மனிதனாக இருந்த்திருந்தால் இந்த ஈனத் தனத்தை எந்த தொண்டனாவது செய்வானா?
“சொந்தப் புத்தியைக் கொண்டே எதையும் சிந்திக்கச் சொன்ன” தத்துவத்தை, சொன்னவனும் செய்யவில்லை, அவனுடைய தொண்டனும் செய்யவில்லை. பின்னர் எதுக்கு இந்த விளம்பரம்?
பாம்பையும் TM கிருஷ்ணாவையும் ஒருசேரப் பார்த்தால் “சொந்த புத்தியைக் கொண்டே எதையும் சிந்திக்கச் சொன்ன” தத்துவத்தைச் சொன்னவன் எதை அடிக்கச் சொல்வானோ!
வைக்கம் வீரர் என்பதே ஒரு புரட்டு என்கிற நிலையில், புரட்டுக்கு மெட்டமைத்து பிலஹரியில் பாட்டமைப்பதெல்லாம் ராமாயண காலத்திலேயே நடந்ததுதான்.
ராவணன் அரண்மனையில் அரக்கியர் சீதையை அணுகி “ராவணன் உன் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கிறான். நீ ஏன் அவனிடம் கடுமையாக நடந்து கொள்கிறாய்?” என்று கேட்டனர்.
“மெய் அன்பு உன்பால் வைத்துளது அல்லால், வினை வென்றோன் செய்யும் புன்மை யாதுகொல்?”
யுகங்கள் கடந்து இன்னொரு அரக்கனை இன்று பிலஹரியில் சிலர் பாடுகின்றனர்.
சரி. அவர் வாய், அவர் உருட்டு.
$$$