தம் தனிப்பாடல்களால் தனிப்பாடல் துறையில் ஒப்பற்ற தனியிடம் பிடித்தவர் பட்டினத்தார். அவரது தனிப்பாடல்களின் தனிச் சிறப்பு என்பது உணர்ச்சி வேகம். ஆழ்மனத்திலிருந்து பீறிட்டெழுந்த உணர்ச்சிகளின் குவியலாய் அவரது பாடல்கள் தமிழை அலங்கரிக்கின்றன. தம் சொந்த வாழ்க்கைச் சம்பவங்கள் சார்ந்து அதிக எண்ணிக்கையில் பாடல்கள் புனைந்தவர் என்ற பெருமையும் பட்டினத்தாருக்கு உண்டு.