‘கள்ளிப் புதர்களும் கற்றாழைக் காடுகளும் நிறைந்திருந்த கலைத் துறையை நாங்கள் கைப்பற்றி விட்டோம்; இனி இங்கே இதிகாசங்களும், புராணங்களும் இடம் பெற இயலாது’ என நண்பர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ‘இராமாயணம்’ திரைப் படத்தை வெற்றிப் படமாகக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரிலும் அப்படத்தை நூற்றுக் கணக்கான நாட்கள் ஓட்டிக் காட்ட முடிந்தது என்றால் அந்தக் காப்பியத்தின் அழியாத் தன்மைக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?