பிரிந்த கன்றைப் பார்த்த தாயாருக்கு எவ்வளவு மகிழ்ச்சி வருமோ அவ்வளவு மகிழ்ச்சி, ராமனை மீண்டும் பார்த்ததில். மாயையால் பிரிந்தவர்க்கு, ராமனைப் பார்த்த மாத்திரத்தில் பரப்பிரம்மத்தைக் கண்டது போல இருந்தது.
Day: January 22, 2024
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
கோவை சிறையில் 'வால்மேடு' பகுதியில் ஒரு வளாகத்தில் திறந்தவெளி சிறைக்கூடங்களில் நாங்கள் அடைக்கப்பட்டோம். உறங்க மட்டுமே சிறை அறைகளை தஞ்சம் புகுவோம். சிறைக்குள் தரக்குறைவான உணவு, சுகாதாரமற்ற சூழல் (கழிப்பறைகளை உபயோகப்படுத்தவே முடியாது), சிறைப்படுத்தப்பட்ட உணர்வு ஆகியவற்றை மீறி, தொண்டர்களின் ஒருங்கிணைந்த பயிற்சி முகாமாக அந்த நாட்கள் மாற்றப்பட்டன. தினமும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பாடல்கள், அளவளாவல்கள், யோகாசனம், உடற்பயிற்சிகள், சிறைக்குளேயே ஷாகா என்று, சிறை நாட்கள் கழிந்தன.
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – பதிப்புரையும் முன்னுரையும்
‘கலியுகத்தில் சங்கமே சக்தி’ என்பதையும், ‘ராமபக்தியால் சாதிக்க இயலாதது ஏதுமில்லை’ என்பதையும், நமது நாட்டிற்கு மட்டுமல்லாது உலகிற்கும் உணர்த்தி இருக்கிறது, புண்ணிய பூமியாம் அயோத்தியில், ராம ஜன்மபூமியில் அமைந்திருக்கும் பேராலயம். இனி வரப்போகும் நமது வாரிசுகளுக்கு ஸ்ரீராமனின் வில்லும் சொல்லும் என்றும் காவலாக இருக்கும் என்ற நம்பிக்கையே, இந்நூலை எழுதி முடிக்கும் போது தோன்றியது.