-ச.சண்முகநாதன்

2. All roads lead to Ayodhya
“மண்ணிடை யாவர் ராகவனன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?” இந்த மண்ணில் ராமனையன்றி வேறு யார் மா தவத்தையும் அறத்தையும் வளர்த்தவர்?
ஸ்ரீ ராமன் பிறந்து வளர்ந்த அயோத்தி எவ்வளவு புனிதமான நகரமாக இருக்க வேண்டும்? He chose to born in Ayodhya.
அவன் பிறந்து வளர்ந்து, அறம் வளர்த்து ஆண்ட அயோத்தி நகரைப் போல தேவலோகத்திலும் இல்லை.
“செங் கண் மால் பிறந்து, ஆண்டு, அளப்ப அருங் காலம்
திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்,
அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும்
பொன் நகர் அமரர் நாட்டு யாதோ”
ஸ்ரீமன் நாராயணன் அயோத்யாவைத் தேர்தெடுத்தான், அவதாரம் புரிய. அயோத்தியா போல தேவலோகத்திலும் ஒரு நகர் இல்லை “இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?”
500 வருட இருளுக்குப் பிறகு அயோத்தியா மீண்டும் ஒளிரப் போகிறது.
புனித நகரான அயோத்தியில் அயல்நாட்டு மன்னர்களும், பிரஜைகளும் வந்து தங்கியிருந்தனர். It was like a tourist attraction. அயல்நாட்டு மன்னர்களும் செல்வந்தர்களும் தங்கியிருந்ததால் அவர்களது சேனைகளும் அயோத்தியிலேயே தங்கியிருந்தாம். It was a busy city.
அயல்நாட்டு மன்னர்கள் ஆசையுடன் தங்கியிருந்த நகரம் அயோத்தியா.
“அரசெலா மவண அணியெலா மவண
வரும் பெறன் மணியெலா மவண
புரசை மால் களிறும் புரவியும் தேரும்
பூதலத்தியாவையும் அவண”
வந்திருந்தவர் எல்லாம் அந்நகரை வியந்து, அங்கேயே தங்கி விட்டனர்.
ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த கொடியவர்கள் செய்த கொடுமையால் 500 வருடங்கள் இருளில்.
எத்தனையோ உயிர் தியாகங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் இழந்த பொலிவைப் பெறப் போகிறது அயோத்தி, “இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?” எனும்படி.
$$$