இசையமைப்பாளர் திரு. கே.வி.மகாதேவன் அவர்களின் இறுதிக் காலத்தில் இசை அமைத்த பாடம் ‘ஏணிப்படிகள்’. அதில் இடம் பெறும், ஒரே மெட்டில் அமைந்த, ஒரே பல்லவியுடன், இரு வகையான சரணங்களுடன் கூடிய இரு பாடல்கள் இங்கே…திரைக்கதையின் போக்கிற்கு ஏற்பவும், கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையிலும், ஆண்- பெண் ஆகியோரின் இருவேறு மனக் கற்பனைகளில் கவியரசர் எழுதிய வண்ண வரிகள் இதோ…