எனது தகப்பன் காலத்தில் எங்களவர்களுக்கு இருந்த தேக பலமும், சௌகரியமும், தீர்க்காயுளும் இந்தத் தலைமுறையிலே ஏன் இல்லை? நாளுக்கு நாள் எனது தேசத்தார்கள் குறுகி, மெலிந்து துர்பலமடைந்து, க்ஷீணித்து அற்பாயுஸாக ஏன் மடிகிறார்கள்? இதை நீக்கும் பொருட்டு ஊருக்கு ஊர் சரீர பலத்திற்குரிய கர்லா, சிலம்பு, கஸரத் இவை பழக்கும் பயிற்சிக் கூடங்கள் ஏற்படுத்துவேன். நான் இப்படிச் செய்வதினால் எந்தச் சட்டம் முறிந்து போகிறது?