வெறும் அரசியல் லாபங்களுக்காக இலக்கியம் பேசும் சுயநலவாதிகளையெல்லாம் தமிழின் முகவரி என்று சுயநலத்துக்காக கொண்டாடுவதைப் பார்க்கும் பொழுது, மகாகவி பாரதியின் “விதியே விதியே தமிழச்சாதியை என் செய்ய நினைத்தாய் எனக் குரையாயோ” என்ற மனக்குமுறல் தான் நினைவுக்கு வருகிறது.
Month: October 2023
தமிழ் கூறும் சநாதனம்!
சநாதன தர்மம் என்பது ஹிந்து வாழ்வியல் அறம். இங்கே தமிழ் இலக்கியங்கள் கூறும் சநாதன வாழ்வியல் அறங்கள் பதமாக எடுத்துக்காட்டப்படுகின்றன...
சநாதன தர்மம்: அமுத மொழிகள் சில…
சநாதன தர்மத்தின் சிறப்புக் குறித்து சான்றோர் பெருமக்கள் சிலரது அமுதமொழிகள் இவை...
சநாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்
கடலுார் மாவட்டம், வடலுாரில் 2023 ஜூன் 21-இல் நடைபெற்ற வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி பேசிய உரையின் சுருக்கமான தொகுப்பு இது…
அகல் விளக்கு- 27
சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். "நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு" என்றான்.... மு.வ.வின் அகல் விளக்கு- நிறைவு....
அகல் விளக்கு- 26
“என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவுகொண்டு பழகவில்லையா? நீங்கள் ஆண்கள் இருவர் பழகும்போதும் அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பழகும்போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம் ஏமாற்றம் எல்லாம்?" என்றாள். அந்த வினாவுக்கு விடையாக நான் ஒன்றும் கூறவில்லை. அவர் என்னிடம் விடை எதிர்பார்க்கவும் இல்லை. படைத்தவனையே கேட்ட வினாவாக இருந்தது அது....
அகல் விளக்கு- 25
தங்கையின் அறிவு நுட்பத்தையும் தெளிவையும் உணர்ந்து போற்றினேன். "சாரதாமணி கணவருடைய நெறிக்கே திரும்பிவிட்டார். அதனால் இராமகிருஷ்ணர் தம்முடைய உயர்ந்த தவத்திற்கும் துணையாக்கிக் கொண்டார். ஆனால் மீராவின் கணவன் அவ்வாறு திருந்தாதிருக்கலாம்; உயராதிருக்கலாம் தன் வழிக்கு வராத கணவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?" என்றேன். என்ன விடை வரப்போகிறது என்ற ஆவலாலேயே விளையாட்டுப் போல் கேட்டேன்....
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- முன்னுரை
இந்தத் தளத்தில் வெளியான ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ தொடர் (21 அத்தியாயங்கள்) நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது; விரைவில் வெளியாக உள்ள இந்நூலின் முன்னுரைப் பகுதி இது...
அகல் விளக்கு- 24
ஊருக்கு வந்ததும், தங்கையை ஏன் அழைத்து வரவில்லை என்ற கேள்வியைத்தான் முதலில் அம்மா கேட்டார். பிறகு தங்கையின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். தையல் பொறி வாங்கும் முயற்சிக்கு நான் பண உதவி செய்யப்போவதைக் கூறியவுடன் அம்மாவின் முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.