ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றி மறையும் தோற்றங்க ளெல்லாம் தியானமாக மாட்டா. புதர்க் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனதிலுள்ள மற்ற கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தை தியானமென்று கூறுகிறோம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக்கொண்டிருப் போமானால், உலகத்துக் காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறுபடுகின்றன.
Day: October 24, 2023
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: நூல் அறிமுகம்
தமிழர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அற்புதமான தமிழ் இலக்கிய ஞானக் கருவூலங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்து, இனிய மாலை போலத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சேக்கிழான். இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், இடையறாத வன்மையையும், பரந்து விரிந்த தன்மையையும், செங்கோலின் நன்மையையும் வெளிப்படுத்துகிறது.