-ஆசிரியர் குழு
நமது ‘பொருள் புதிது’ இணையதளத்தில் வெளியான இரு தொடர்கள் நூல் வடிவம் பெற்று, இந்த ஆண்டு விஜயதசமி அன்று வெளியாவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் தொகுத்த, ‘வாழும் சனாதனம்’ தொடரில் (மொத்தம் 70 பதிவுகள்) தேர்ந்தெடுக்கப்பட்ட 37 கட்டுரைகள் நூலாக வடிவம் பெற்றுள்ளன. இந்நூல் ‘என்றும் வாழும் சநாதன தர்மம்’ என்ற பெயரில் வெளிவருகிறது.
இதே தளத்தில் ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ என்ற தலைப்பில் திரு. சேக்கிழான் எழுதிய தொடர் அதே தலைப்பில் நூலாக வெளிவருகிறது. இவ்விரு நூல்களையும் சென்னையில் உள்ள ‘விஜயபாரதம் பிரசுரம்’ வெளியிடுகிறது.
இந்த நூல்களின் வெளியீட்டு விழாவை திருப்பூரில் செயல்படும் ‘அறம் சிந்தனை வட்டம்’ அமைப்பினர் விஜயதசமியன்று (24.10.2023) சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதன் அழைப்பிதழ் இங்கே இணைக்கப்பட்டுள்ளது…

.