பாரதியின் புகழ் பரப்பிய முன்னோடிகளில் ஒருவர் அமரர் தொ.மு.சி.ரகுநாதன். மகாகவியின் நூற்றாண்டு விழாவையொட்டி இவர் எழுதி வெளியிட்ட நூல் ‘பாரதி - காலமும் கருத்தும்’ என்பது. மகாகவி பாரதி முதன்முதலில் ஆசிரியராக இருந்து பணியாற்றிய ‘சக்கரவர்த்தினி’ இதழ் பற்றிய ஆராய்ச்சியை இந்த நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த அரிய நூலிலிருந்து பாரதியின் ‘சக்கரவர்த்தினி’ பற்றிய பகுதி இது…