அனந்த சக்தி

தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவே நாம் உயிர்தரிக்கின்றோம்.   “மாதா இந்த நாட்டு ஜனங்களுக்குச் சக்தி யதிகரிக்கும்படி செய்க; அக் காரியத்தை நிறைவேற்றுதற்குரிய சக்தியை எனக்கருள் புரிக”' என்று நம்மில் ஒவ்வொருவனும் தியானம் புரிய வேண்டும்.