பொது சிவில் சட்டத்தை இயற்றுவதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதால், இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கிறது என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், இந்து முன்னணி மாநில துணைத் தலைவருமான ஜி. கார்த்திகேயன். இந்து தமிழ் டிஜிட்டலுக்கு அவர் அளித்த கட்டுரை இது...
Day: August 27, 2023
வானம் வசப்பட்டது! நிலவில் கால் பதித்தது இந்தியா!
நிலவைக் காட்டி சோறூட்டிய அன்னையர்களால் வளர்ந்தவர்கள் நாம். இன்று அதே நிலவில் நமது ‘சந்திரயான் – 3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் இறங்கி நிலைகொண்டிருக்கிறது. அதன் குழந்தையான ‘பிரக்யான்’ ரோவர் நிலவில் இறங்கி ஆராய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இனிவரும் தலைமுறைகளில் குழந்தைகளுக்கு சந்திரனைக் காட்டி சோறூட்டும்போது, ‘சந்திரயான்’ அங்கு இருப்பதும் கூறப்படும். இது ஒரு பொன்னான தருணம். உலகில் இந்தியர்கள் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட தருணம்.