இந்தியாவின் பன்முகத்தன்மை, மதச் சுதந்திர உரிமையை ‘பொது சிவில் சட்டம்’ அழித்துவிடும்

“பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தேசத்தின் பன்முகத்தன்மையையும் மதச் சுதந்திரத்துக்கான உரிமையையும் அழித்துவிடும். பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் மட்டுமே எதிர்க்கின்றனர் என்பது தவறான கருத்து. ஹிந்து மதத்துக்குள் கூட, பழங்குடியினர் போன்ற சில குழுக்கள் பொது சிவில் சட்டத்தை விரும்பவில்லை” என்கிறார் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினரும், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான பி.வில்சன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது…