வில் வித்தையில் பேராற்றல் கொண்ட ராமன், தன் ஒரு அம்பினால் ராவணனின் வில் முறிந்து போகச் செய்கிறான். ஒரே ஒரு அம்புதான்! ராவணன் வில் முறிந்தது. ராவணன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஈரேழு உலகிலும் தனை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புக் கொண்டிருந்தவனை, ஒரே அம்பில் நிலைகுலையச் செய்கிறான் ராமன்.
Day: August 14, 2023
பாரதி போற்றும் தேசியக் கல்வி- 7
“சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண்,அடுத்து பெண். ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை சகோதரி நிவேதிதை, மகாகவி பாரதியிடம் விதைத்தார். அவரைத் தனது மானசீக குருவாக ஏற்ற பாரதி அதனையே தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.