-மகாகவி பாரதி
மகாகவி பாரதியின் காலத்தில் காவடிச்சிந்து மிகவும் போற்றப்பட்டது. எட்டயபுரம் அரண்மனையில் பாரதி பணியில் இருந்தபோது காவடிச்சிந்து பாட முடியுமா? என்ற புலவர்கள் கேட்க, பாரதியும் காவடிச்சிந்து மெட்டில் பாடலொன்று பாடியுள்ளார். அப்பாடலின் ஒரு கண்ணி மட்டுமே கிடைத்துள்ளது. இதோ அப்பாடல்…

பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கௌ மாரன் – ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன், அடி
பணி சுப்பிர மணியர்க்கருள்
அணி மிக்குயர் தமிழைத்தரு
பக்தர்க் கெளியசிங் காரன் – எழில்
பண்ணு மருணாசலத் தூரன்!
குறிப்பு:
பாரதி பாடல்களில் ‘எங்கள் தாய்’ என்ற தலைப்பில் அமைந்த ‘தொன்று நிகழ்ந்த தனைத்தும்’ என்னும் பாடல் அண்ணாமலை ரெட்டியாரின் ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற காவடிச்சிந்து மெட்டைப் பின்பற்றிப் பாடப்பட்டதாகும்.
மாகாளியின் புகழைப் பாடும் ‘காலமாம் வனத்திலண்ட’ என்ற பாடல் அண்ணாமலையாரின் ‘பாலைவாய்க் கமுகில் வந்தூர்’ என்ற காவடிச்சிந்தின் மெட்டில் அமைந்த பாடலாகும். ‘தேடியுனைச் சரணடைந்தேன்’ என்ற முத்து மாரியம்மன் பாடலைக் காவடிச் சிந்தில் பாடி வருகின்றனர்.
$$$