தவறுகள், குற்றங்கள் அல்ல…!

தவறி விழுவது குற்றமல்ல, அதையே வாடிக்கையாகக் கொள்ளும்போது அதுவே குற்றமாகிறது. வீழ்வது தவறு என்பதை மனசாட்சிப்படி உணர்பவன் தவறிழைத்தாலும், குற்றமிழைக்க மாட்டான். தவறிழைப்பதற்கான தூண்டுதல் எங்கேனும் இருந்து வந்துகொண்டே தான் இருக்கும்; நமது மனம் தவறிழைக்கத் தயாராகாத வரை அதனால் குற்றமில்லை- என்றெல்லாம் தோன்றுகிறது, திரு. ஜெயகாந்தன் அவர்களின் இச்சிறுகதையைப் படிக்கும்போது…