-புதுமைப்பித்தன் நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை. அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக்கொண்ட சிலுவை அது. அன்றுமுதல் - ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது - இன்றுவரை, ஆசைகள் உந்த, அழிவு அவனைக் கைவிட, மரணம் என்ற … Continue reading பிரம்ம ராக்ஷஸ்
Tag: புதுமைப்பித்தன்
செல்லம்மாள்
சாமானியனுக்கு வாழ்க்கையே போராட்டம் தான். அன்றாடம் வேலை செய்தால் தான் வயிற்றுக்குச் சோறு என்ற நிலையில் வாழ்வோரின் ஆரோக்கியம் கெட்டால், அவர்களது வாழ்வே நித்தமும் நரகம் தான். அத்தகைய நிலையிலும் வாழ்க்கையை ஒரு பிடிப்புடன் நடத்தும் இரு சாமானிய ஜீவன்களின் கதை இது. 80 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பதிவுகள் ஆங்காங்கே தூலமாய்த் தெரியும் இக்கதையில், வறுமையின் கோரம் மிகத் தெளிவாகவே வெளிப்படுகிறது. புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் முத்திரைக் கதையாக இக்கதை கொண்டாடப்படுவது ஏன் என்று, இதைப் படிக்கும்போதுதான் உணர முடியும். ஹூஊம்....
கபாடபுரம்
சந்திரோதயம் இதழில் புதுமைப்பித்தன் எழுதிய தொடர் சிறுகதை இது... புதுமைப்பித்தனின் புனைவுத் திறனும் நகைச்சுவை உணர்வும் இக்கதையில் போட்டியிடுகின்றன...
சாப விமோசனம்
இந்திய மொழி இலக்கியங்களில் மிகுந்த தாக்கம் செலுத்தும் பண்டைய இலக்கியங்களில் ராமாயணமும் மகாபாரதமும் முக்கியமானவை. இன்றும் தொடரும் இந்த இழையறாத பண்பாட்டு உறவு இல்லாத எழுத்தாளர்களைக் காணல் அரிது. அந்த வகையில், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பிரதான இடம் வகிக்கும் புதுமைப்பித்தன், ராமாயணத்தின் தாக்கத்துடன் 'சாப விமோசனம்' கதையை எழுதியது வியப்பில்லை; ஆனால், கால மாற்றத்துக்கேற்ப தனது சிந்தனையில் எழுந்த கேள்வியையே மையமாக்கி இந்த சிறுகதையைப் புனைந்திருக்கிறார். கதை வெளியான காலத்தில் (1943) பெரும் புயலை உருவாக்கிய கதை இது. கணவரான கௌதம மகரிஷியின் சாபத்தால் கல்லான அகலிகை, ராமனின் பாதத் தூளி பட்டு பெண்ணான கதை நமக்குத் தெரியும்; அதே அகலிகை சீதையை அக்னிப்பிரவேசம் செய்யுமாறு ஸ்ரீராமன் சொன்னான் என்று கேட்ட மாத்திரத்தில் மீண்டும் கல்லாகிறாள்- புதுமைப்பித்தனின் கதையில்....
மகாமசானம்
வாழ்வின் நிலையாமையை 70 ஆண்டுகளுக்கு முந்தைய நடையில் எழுதி இருக்கிறார் சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தன். வாழ்வை முடிக்கப்போகும் கிழட்டுப் பிச்சைக்காரனும், வாழ்வு என்றால் என்னவென்றே அறியாத சிறு குழந்தையும் இயல்பாக சந்திக்கிறார்கள். இருவருக்கும் அந்தச் சந்திப்பு புரிவதாகத் தெரியவில்லை. அதைப் படிக்கும் நமக்குத் தான் நிலையாமை புரிகிறது. அற்புதமான உருவகக் கதை இது...
ஒரு நாள் கழிந்தது
தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளுள் ஒருவரான புதுமைப்பித்தன் 85 ஆண்டுகளுக்கு முன் ‘மணிக்கொடி’ இதழில் எழுதிய சிறுகதை இது... இதில் குறிப்பிடப்படும் முருகதாசர் புதுமைப்பித்தனே தானோ என்ற எண்ணம் படிக்கும் யாருக்கும் வரவே செய்யும். அவ்வளவும் சுய எள்ளல். தமிழில் எழுத்தாளனாக இருந்தால் சுய எள்ளலுடன் தான் வாழப் பழக வேண்டும் போல. படிக்கும்போது நகைச்சுவையாகத் தெரிந்தாலும், நமது இதழ்கள் முறுவலித்தாலும், படித்து முடிக்கும்போது நெஞ்சின்மீது ஒரு பெரிய பாரம் ஏறி விடுகிறது. இதுவே இந்தச் சிறுகதையின் வெற்றி...
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
"அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு" என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.
"கூச்சமா இருக்கு" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.
(புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ சிறுகதையில் இருந்து)....