இரண்டு உலகங்கள்

‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது பழமொழி. அதுபோலவே தான், மனித உணர்வுகள் அற்ற அறிவியலும் இலக்கியமும் வாழ்வின் இனிமைக்கு உதவாது என்கிறாரோ புதுமைப்பித்தன்?

ஆற்றங்கரைப் பிள்ளையார்

சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தனின் அற்புதமான உருவகக் கதை இது... 1934ஆம் ஆண்டு ‘மணிக்கொடி’ இதழில் வெளியான இக்கதை சொல்ல வருவது என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா?

கண்ணன் குழல்

சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தனின் சினனஞ்சிறு சிறுகதை இது. ஆனால் உட்பொருள் சிறியதல்ல...

கோபாலய்யங்காரின் மனைவி

இறந்தகாலத்தை உயிர்ப்பிக்க வல்லவன்; நிகழ்காலத்தின் எல்லையைக் கடந்தவன்; எதிர்காலத்தை எழுத்தில் வடிப்பவனே உண்மையான எழுத்தாளன். இதோ, மகாகவி பாரதி எழுதிய, முடிவு பெறாத ‘சந்திரிகையின் கதை’ நாவலின் ஒரு திவலையை தனது எழுத்தென்னும் உருப்பெருக்கியால் மீள் உருவாக்கம் செய்கிறார் சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தன்...

அவதாரம்

அவதாரம் என்றால் மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். இக்கதையில், ஒருவன் கீழிருந்து மேலே செல்கிறான். மனித வாழ்வின் புரிபடாத சிக்கல்களையும் தவிப்புகளையும் பூடகமாகச் சொல்லிச் செல்லும் எழுத்தாளர், இங்கே இசக்கிமுத்துவின் மனமும் உருவமும் சிறிது சிறிதாக மாறி வருவதை அவதாரத்திற்கு முந்தைய கணங்களாக முன்வைக்கிறார். ஆன்மிக வேட்கை கொண்ட இக்கதையை புதுமைப்பித்தன் எழுதிய ஆண்டு 1947...

கடிதம்

நல்ல எழுத்துகளைப் பாராட்டுவது அதனை மேலும் வளர்க்கும். இல்லாவிடில், இக்கதையில் வரும் எழுத்தாளர் சிங்காரவேலு போல வெறுமையில் தான் வாட வேண்டி இருக்கும். இக்கதையில் வரும் எழுத்தாளர் யார், புதுமைப்பித்தனே தானா, அல்லது இதனை இங்கு பதிவேற்றும் நானா?

படபடப்பு

போர்க்களச் சூழலை ஓர் எழுத்தாளர் எப்படிப் பார்க்கிறார்? 1946-இல் புதுமைப்பித்தன் எழுதிய இந்த சிறுகதையே இக்கேள்விக்கு விடை....

தனி ஒருவனுக்கு

தீண்டாமையையும் பசிக் கொடுமையையும் போலித்தனங்களும் கண்டு வெட்கி, ஆவேசம் கொள்ளும் புதுமைப்பித்தனின் அக்கால நடையிலான சிறுகதை இது…

விநாயக சதுர்த்தி

புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகளுள் ஒன்று இது. இதில் செவிவழிக் கதை ஒன்றை சிறுகதைக்குள் நுழைக்கும் புதுமைப்பித்தன், நாத்திகவாதம் செய்யும் கதாபாத்திரமாக தன்னையே இருத்திக் கொள்கிறார். தமிழக வழக்கப்படி கதையில் வரும் மனைவி பக்திமான் தான் வேறென்ன?

காஞ்சனை

சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன் எழுதிய திகில் கதை இது....

அகல்யை

புராணக் கதைகளை மீள்பார்வை செய்வது இலக்கியத்தில் ஒரு புதிய போக்கு. தமிழ்ச் சிறுகதை உலகின் முடிசூடா மன்னரான புதுமைப் பித்தனும் இதில் விலக்கல்ல. அவரது ‘சாப விமோசனம்’ சிறுகதை, அது வெளிவந்த காலத்தில் (1943) பெரும் விவாதத்தையும் சிந்தனைப் புரட்சியையும் உருவாக்கியது. அக்கதையில், அகலிகையின் பார்வையில் “ஆணுக்கு ஒரு நீதி, பெண்னுக்கு ஒரு நீதியா?” என்று கேட்ட புதுமைப் பித்தன், அதே அகலிகை கதையை மீண்டும் ‘அகல்யை’ என்ற சிறுகதையாகத் தீட்டுகிறார். இதில் அகலிகையின் கணவரான கௌதமனை நியாய உணர்வுள்ள ஆணாகச் சித்தரிக்கிறார். இனி கதைக்குள் செல்லுங்கள்!

இது மிஷின் யுகம்

கூலிக்கு வேலை செய்யும் உழைப்பாளிகளின் இயந்திரத்தனமான வாழ்க்கையை சில நிமிட நிகழ்வுகளில் ஒரு சிறுகதையாக இங்கே பதிவு செய்கிறார் புதுமைப்பித்தன். ஓர் உணவகத்தில் நிகழும் சம்பாஷனைகள், காட்சிகளை செதுக்கிவைத்த வரிகளில் படிமம் ஆக்கி இருக்கிறார். பெரிய உபதேசம் இல்லை... படித்து முடிக்கும்போது அந்த ‘சர்வர்’ நமது மனதில் பதிந்து விடுகிறான்....

கயிற்றரவு

வாழ்வின் பொருளின்மையை சிறுகதைக்குள் அடக்க முயலும் புதுமைப் பித்தனின் மேதமையை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. கண்ணுக்குப் புலப்படும் வாழ்க்கை, கயிறா, அரவமா? கடிக்கும் வரை கயிறு... கடித்த பிறகு அரவம். இது அனுபவ ஞானம். ஆனால், அந்த அரவத்தைக் கயிறென்று துணிந்தே வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. பொறுமையுடன் நிதானமாகப் படிக்க வேண்டிய வேதாந்தக் கதை இது...

கடவுளின் பிரதிநிதி

கோயில்களுக்குள் பட்டியலின (தாழ்த்தப்பட்ட) மக்களும் செல்வது இன்று இயல்பாகி இருக்கலாம். ஆனால், அதற்கு வித்திட்டது மகாத்மா காந்தி விடுதலை இயக்கத்தில் ஹரிஜன முன்னேற்றத்தை ஓர் ஆதார விஷயமாகக் கொண்டதுதான். ஆயினும், இதில் உடனே நமது சமூகம் திருந்திவிடவில்லை. அதற்கு பெருத்த போராட்டங்கள் நடத்தப்பட வேண்டி இருந்தது. இறுதியில் சட்டப்படி கோயிலுக்குள் ஹரிஜனங்கள் செல்லும் உரிமை பெற்றனர் என்றால் அதற்கு வழிவகுத்தது அன்றைய காங்கிரஸ் பேரியக்கம் தான் எனில் மிகையில்லை. இதற்கான போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை  என்பதற்கான நிரூபணம் புதுமைப்பித்தன் எழுதி, ‘மணிக்கொடி’யில் (1934) வெளியான இச் சிறுகதை…இலக்கியம் வரலாற்றின் பதிவும் கூட என்பது உண்மைதான்.  

மனித யந்திரம்

அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக உழைத்து ஓடாய்த் தேய்பவனும்கூட தன்னிலை மாறுவதில்லை என்ற அரிய உண்மையை வெளிப்படுத்தும் சிறுகதை (1937) இது. இதன் நாயகன் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு பொய்க்கணக்கு எழுதும் வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்வதில்லை; ஒரே இடத்தில் 45 ஆண்டுகள் வேலை பார்ப்பதே மனித யந்திரமான அவருக்கு கௌரவம். அவருக்கும் சிறு சபலம் வருகிறது. ஆனால், அச்சம் அந்த சபலத்தை வென்று விடுகிறது. ஏழைக்கு தவறு செய்யும் வாய்ப்பு கூட கிடையாது என்கிறாரோ புதுமைப்பித்தன்? நேர்மையாக இருப்பவன் யாரைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்பது தான் இந்த சிறுகதையின் நீதியா? அக்காலத்திய வெளிப்புறச் சித்திரங்கள், நாணய விகிதங்கள், நெல்லைத் தமிழ் ஆகியவற்றையும் இக்கதையில் தரிசிக்கலாம்...