பாரதி போற்றும் தேசியக் கல்வி – பதிப்புரை

பொருள் புதிது தளத்தில் வந்த ‘பாரதி போற்றும் தேசியக் கல்வி’ தொடர் கட்டுரை தொகுக்கப்பட்டு, கோவையில் உள்ள சிவராம்ஜி சேவா அறக்கட்டளையால் நூலாக வெளியிடப்பட உள்ளது. இந்நூலுக்கு திரு. எஸ்.ஸ்ரீராம்ஜி அளித்துள்ள அணிந்துரை / பதிப்புரை இது...

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 8

கல்வி என்பது அறிவுப் பெருக்கமாக மட்டுமல்லாது, அதன் பயனாகவும் இருக்க வேண்டும். கோட்பாட்டு அறிவியல் பயன்பாட்டு அறிவியலாக மாறுகையில் தான், உலகம் பயனுறுகிறது. விண்ணியல் விதிகள் அனுபவமாகும்போது ராக்கெட் விண்ணைச் சாடிப் பாய்கிறது.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 7

“சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண்,அடுத்து பெண்.  ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை சகோதரி நிவேதிதை, மகாகவி பாரதியிடம் விதைத்தார். அவரைத் தனது மானசீக குருவாக ஏற்ற பாரதி அதனையே தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 6

கல்வி மட்டுமல்லாது மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துதல் அவசியம் என்கிறார் மகாகவி பாரதி. அவரது  ‘தேசியக் கல்வி’ திட்டத்தில் ‘சரீரப் பயிற்சி’க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 5

மகாகவி பாரதி தான் முன்வைத்த தேசியக் கல்வி என்ற திட்ட்த்தில் வலியுறுத்தும் பாடங்கள்: 1. எழுத்து, படிப்பு, கணக்கு, 2.  இலேசான சரித்திரப் பாடங்கள், 3.  பூமி சாஸ்திரம், 4.  மதப்படிப்பு, 5. ராஜ்ய சாஸ்திரம், 6.  பொருள் நூல், 7. ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம், 8.  சரீரப் பயிற்சி, 9.  யாத்திரை (Excursion) ஆகியன. ...

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 4

மகாகவி பாரதி விரும்பிய கல்வி என்பது தேசியக் கல்வி ஆகும். அக்கல்வி ஆன்மிக அடிப்படையில் அமைந்திருக்கும். தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாகவும், மாணவர்களை சொந்தக்காலில் நிற்கச் செய்வதாகவும், தேசியச் செயல்வீரர்களை உருவாக்குவதாகவும் அக்கல்வி அமைந்திருக்கும்....

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 3

பாரதி எழுதிய ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில், பாரதி விரும்பிய சுதேசிப் பள்ளியின் இலக்கணமும், அங்கு பயிற்றுவிக்கப்பட வேண்டிய பாடங்களும், ஒரு தேர்ந்த கல்வியாளர் போல திட்டமிட்டு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு உவக்கிறோம்.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 2

திருவள்ளுவரையும் சுவாமி விவேகானந்தரையும் தனது ஆதர்ஷ நாயகர்களாகக் கருதியவர் மகாகவி பாரதி. இது, அவரது படைப்புகளில், சிந்தனைகளில் வெளிப்பட்டபடியே இருக்கிறது. பாரதியின் கல்விச் சிந்தனைகள் பலவும் வள்ளுவரும் விவேகானந்தரும் கூறியவையே. வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட நாயகரான பாரதி, இக்கருத்துகளையே தனது பாணியில் முன்வைக்கிறார்.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 1

வைரத்தின் ஒவ்வொரு முகப்பும் ஒளியுடன் திகழ்வது போல, மகாகவி பாரதியின் கவிதைகளும் கட்டுரைகளும் தேசநலனை மட்டுமே ஒளியாக உமிழ்கின்றன. அவற்றில் கல்விக்கு அவர் அளிக்கும் இன்றியமையாமையை மட்டும் இங்கு நாம் தொடராகத் தொகுத்துக் காணலாம்....