என் தந்தை

மகாகவி பாரதியின் இளைய மகள் சகுந்தலா. இவரை மகாகவி  ‘பாப்பா’ என்றுதான் அழைப்பார். பாரதியாரின் அன்பு மகள் தன் தந்தையைப் பற்றி  ‘என் தந்தை’ எனும் தலைப்பில் ஒரு நூலை இயற்றி பாரதியார் பற்றிய பல அரிய செய்திகளைக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்து சில சுவையான பகுதிகளை, மகாகவி பாரதியின்  பிறந்த நாளை ஒட்டி, இங்கே காண்போம்.